உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? – அன்புமணி ராமதாஸ்

‘சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மதிப்பீட்டு முறையில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்வு வாரியம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்குக் குறைந்த மதிப்பெண்களும், தகுதியற்றதாகத் தோன்றுபவர்களுக்கு அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருப்பது, இது ஒரு திட்டமிட்ட முறைகேடு என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முனைவர் பட்டம் பெற்ற […]

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: பொதுக்குழுவில் நிறைவேறியது தீர்மானம்

‘சென்னை: சுமார் 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இன்று வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்கவும், கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணிக்குள் நிலவிய அதிருப்தி மற்றும் திரைமறைவு அரசியல் நகர்வுகள் இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மதிமுக-வின் இந்த அதிரடி […]

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

‘சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் திரைப்படத் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவை, தமிழர் அல்லாதவர் மற்றும் காவிரி விவகாரத்தில் மோதலில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்ற காரணங்களைக் காட்டி சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும், அதிகார முறைகேடு என்றும் அவர் சாடியுள்ளார். தமிழர்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலனையும் டெல்லியில் முன்னிறுத்த ஒரு தமிழரே தகுதியானவர் […]

5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் அரங்கேறியுள்ளன என்று கூறி, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான துமிந்த நாகமுவ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர். […]

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்விளான் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் தூண்டில் சகிதம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரைத் தேடிச் சென்ற தந்தையாருக்கு, காலை அவர் குளத்தில் […]

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதி

அரச உளவுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் (Cardiology Unit) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ் சல்லேக்கு ஏற்கனவே இருக்கும் இருதய நோய் நிலைமை (Heart condition) தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக அவர் இதய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர் இன்று (சனிக்கிழமை) இதய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன், தற்போது நிபுணத்துவ மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. […]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 தைக் கடந்தது

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, டெங்கு நோயினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இம்முறை டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால், பல வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை இடவசதியைத் தாண்டி அதிகரித்துள்ளதுடன், நாட்டின் 14 மாவட்டங்கள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்தச் சூழலில், டெங்கு அபாயம் அதிகம் உள்ள 600 கிராம […]

சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிவித்தல்

தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், உரிய சட்ட நடவடிக்கைகளை அவதானிப்பதும் அது குறித்த மேலதிக நடவடிக்கைகளைச் சங்கத்திற்கு அறிக்கைப்படுத்துவதுமே சங்கத்தின் வகிபாகமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், இந்தச் சட்ட நடவடிக்கைகளின் போது சங்கத்தின் சார்பில் கருத்துகளை முன்வைப்பதற்கு அதன் நிறைவேற்றுக் குழு எந்தவொரு சட்டத்தரணிக்கும் அதிகாரமளிக்கவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தரணிக்காக எந்தவொரு முன்னிலையையும் செய்வதற்கு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அந்த […]

232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 20 மாத காலப்பகுதியில் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், சிவப்பு அறிவித்தல் இல்லாமலேயே மேலும் 35 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, […]

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்: 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது!

லங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ விசேட தேசிய செயற்திட்டத்தின் கீழ், இதுவரை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தத் தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வரையிலான காலப்பகுதியில், முப்படைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் நாடு முழுவதும் 2 இலட்சத்து 15 […]