யாழில் சனுஜன் மரணம்!! எதிர் திசையில் வந்த வண்டி மோதியது

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த சனுயன் வயது( 22,) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சாரதி பயிற்சி நிறைவு பெற்றவுடன் வாகனத்தில் இறங்கி எதிர்த்து திசைக்கு சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த மீன் ஏற்றி சென்ற வாகனம் வேகமாக வந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது. இளைஞன் […]
ஜெர்மனியில் மூடிய காருக்குள் குழந்தை உயிரிழந்த சோகம்: இலங்கைத் தமிழ் தாய் கைது

ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் (Kindergarten) கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார். ஆனால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் […]
முல்லைத்தீவில் உள்ள ரோகிங்யா அகதிகளை ஐநா அமைப்பு சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்-ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி

முல்லைத்தீவில் உள்ள ரோகிங்யா அகதிகளை ஐநா அமைப்பு சந்திப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கைக்கான ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலக அகதிகள் தினத்தில், இலங்கையில் கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் பக்கம் நாங்கள் நிற்கிறோம்; அவர்களின் துணிச்சல், பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையிலும் அவர்கள் கொண்டுள்ள தளராத நம்பிக்கை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களை (Asylum-seekers) பெருந்தன்மையுடன் வரவேற்றுத் தத்தமது […]
படகுத்துறையில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவு கொள்வனவு வாடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு- ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை-வாடிகளின் உரிமையாளர்களால்

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுக் கொள்வனவனவு வாடிகளின் உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே […]
மேலும் 394 என்புக்கூடுகள் செம்மணியில் அடையாளம்!

ம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது. அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 370என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகள் தமிழர் பகுதியில் அதிகரிக்கிறன!

இலங்கை முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து விட்டன. இது போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(19.06.2026) ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 17 ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் […]
பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசேட விசாரணை!

தெரணியாகலை நூரி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை சோதனையிடச் சென்ற அவிசாவளை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போதே, அவிசாவளை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாக்குதலை நடத்திய கடத்தல்காரர்கள் குழுவினரும் பொலிஸ் […]
பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: சந்தேகநபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இக்கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது காதலனைத் தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இதுவரை சந்தேகநபரைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இருப்பினும், சந்தேகநபர் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, இந்த சந்தேகநபர் குறித்த யுவதிக்கு முன்னால் ‘தினேத் திஸாநாயக்க’ என்ற பெயரில் தோற்றமளித்த போதிலும், அவரது தேசிய அடையாள […]
பெண் வைத்திய அதிகாரி குறித்து அர்ச்சுனா அவதூறு பரப்பக் கூடாது நீதிமன்றம் என உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் தாக்கல் செய்த வழக்கில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (19) தீர்ப்பளித்துள்ளது. தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் போலிப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று தெரிவித்து, தெல்லிப்பழை […]
வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் […]