பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: சந்தேகநபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இக்கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது காதலனைத் தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இதுவரை சந்தேகநபரைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், சந்தேகநபர் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, இந்த சந்தேகநபர் குறித்த யுவதிக்கு முன்னால் ‘தினேத் திஸாநாயக்க’ என்ற பெயரில் தோற்றமளித்த போதிலும், அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள உண்மையான பெயர் ‘ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரியான் ஜயசுந்தர’ என்பதும், அவர் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்து வந்துள்ளதுடன், இவருக்கு பல யுவதிகளுடன் தொடர்புகள் இருந்துள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பல சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமஹாராமய உள்ளிட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இவருக்கு எதிராகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்த சந்தேகநபரின் குற்றச் செயல்களுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்து உதவிகளை வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த சந்தேகநபர் உண்மையிலேயே ஒரு மென்பொருள் பொறியியலாளரா? (Software Engineer) என்பதும் சந்தேகத்திற்குரியது எனவும், யுவதிகளை ஏமாற்றுவதற்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டியுள்ள, உயிரிழந்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபருக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி பிற்பகல் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், அவர் அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பௌதீக சிகிச்சை நிபுணர் என்பது பின்னர் தெரியவந்தது.

குறித்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபர், இதற்கு முந்தைய நாள் யுவதியின் உடலை நுவரெலியா பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருந்து வெளியே கொண்டு வரும் காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

இதேவேளை, வெலிகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெற்றன.

சந்தேகநபர் தொடர்பாக தற்போது நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்