இன்றும் 9 மனித எலும்புக்கூடுகள் செம்மணியில் புதிதாக அடையாளம்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய (09) அகழ்வின் போது, மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இதுவரை 327 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 311 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 20ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்ற நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.
கிளிநொச்சி இளைஞனுக்கு “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை ; நீதிமன்றத்தை நாடி பிணை பெறமுடியும் – ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை. நீதிமன்றத்தை நாடி பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசைப் பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று (9) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
தைரியமிருந்தால் தேர்தலை நடத்துங்கள்; அரசுக்கு ரஞ்சித் மத்தும பண்டார சவால்

அரசாங்கத்திற்குத் தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை அளவிட்டுக் காட்டுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்குத் தைரியம் இருந்தால் இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க 43 சதவீத வாக்குகளையே […]
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – ஆனந்த விஜேபால

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ‘விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத சங்கீத்சனன் என்பவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த […]
விடுதலைப் புலிகள் கருப்பொருள் பாடல்: அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியவர்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை? – நாமல் கேள்வி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லைஎன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சபையில் கேள்வி எழுப்பினார்.. அதே பாடலை பாடியதற்காக கிளிநொச்சி இளைஞன் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு சார்பான வகையில் சட்டத்தை […]
சலேக்கு ஆதரவான சத்தியாக்கிரகத்தின் 2ஆம் நாள்: குறைந்தளவிலானோர் பங்கேற்பு

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதை முதன்மை நோக்கமாக வைத்து, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட பிரச்சாரம், பெரும் சர்ச்சை மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. நேற்று (08) ஆரம்பமான இப்போராட்டம், 278 உயிர்களைப் பலிவாங்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் […]
சுரேஷ் சல்லே நடத்தப்படும் விதம் குறித்து நாடாளுமன்ற மீளாய்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அழைப்பு

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு இணங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சல்லே, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச […]
தலவத்துகொட சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை (செவ்வாய்க்கிழமை, ஜூன் 09) இந்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நான்கு ஊழல் வழக்குகளிலும் சரண குணவர்தனவிற்கு தலா நான்கு ஆண்டுகள் கடூழியசிறைத்தண்டனை

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ஊழல் வழக்குகளிலும், அவருக்கு தலா நான்கு ஆண்டுகள் வீதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் (Mohamed Mihail), இந்த வழக்குகளுக்காக மொத்தம் 1.8 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் (Development Lotteries Board) தலைவராகப் பதவி […]
ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கடத்தல் வழக்கு: 8 ஆண்டுகளுக்குப் பின் சந்தேகநபர் சி.ஐ.டி.யினரால் கைது!
நபர் ஒருவரைக் கடத்திச் சென்று, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரங்கஸ்பிட்டிய – கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த 2018 செப்டம்பர்; 09ஆம் திகதி கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இது குறித்து பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதற்கமைய, […]