50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்; ரொறன்ரோவிற்கு விசேட காலநிலை எச்சரிக்கை!

கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றர் (50 mm) வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளதை அடுத்து, அந்நகரிற்கு ‘கனடா சுற்றுச்சூழல் பிரிவு’ (Environment Canada) விசேட காலநிலை அறிவித்தல் (Special weather statement) ஒன்றை விடுத்துள்ளது. இன்று காலை வேளையில் வெப்பநிலை 13 பாகை செல்சியஸ் (13 C) அளவில் நிலவும் அதேவேளை, சுமார் 10 முதல் 20 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியுடன் இக் காலநிலை மாற்றம் ஆரம்பிக்கும் […]
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை முறைப்படுத்த புதிய கிரிக்கெட் யாப்பு விதிகள்?

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மை கொண்ட நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தவும் புதிய கிரிக்கெட் யாப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகவியலாளர்கள் மத்தியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழுவின் தலைவர் இரான் விக்ரமரட்ன தெரிவித்தார். ‘கிரிக்கெட் விளையாட்டின் பங்குதாரர்கள் பொதுமக்களே என்பதால், புதிய யாப்பு விதிகள் தயாரிக்கும் போது பொதுமக்களின் அபிப்பிராயங்களும் கோரப்படும். ஜனாதிபதியிடமிருந்தோ, விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்தோ எங்களது குழுவுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சுயாதீனமாக நிறைவேற்றுவோம்’ எனவும் […]
மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி ஏன் எமது காணிகளை இன்னமும் விடவில்லை?

க்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அநுர குமாரத்திசாநாயக்க ஏன் எமது காணிகளை விடவில்லை என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மயிலிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மா வினை அவர்களின் அரசாங்கத்தை இல்லாமல் செய்தது. அதேபோல் அநுர அரசாங்கமும் மக்களை துன்பப்படும் வகையில் மேற்கொள்ளும் எந்த ஒரு கர்ம வினையும் அவர்களின் அரசாங்கத்தை […]
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!
கொழும்பு – பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கடந்த 2025 ஒகஸ்ட் 07ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த குற்றச் செயலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச […]
தந்தை, மகன்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை; கொலை இடம்பெற்று 19 வருடங்களின் பின் தீர்ப்பு

19 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிலேயே, பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் படபொல – படதூவ பகுதியைச் […]
வட மாகாண சட்டத்தரணிகள், பொலிஸாருக்கு டிஜிட்டல் சட்டக் கருத்தரங்கு

வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் சனிக்கிழமை (23) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இணையச் சட்டம், எண்ணிமச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துதல், சிவில் […]
திறைசேரி நிதி கொள்ளை விசாரணைக்காக விசேட எஃப்.பி.ஐ (FBI) குழுவினர் வரவில்லை; அமெரிக்கத் தூதரகம் உத்தியோகபூர்வ மறுப்பு

இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய 625,000 அமெரிக்க டொலர்கள் இணையவழியாகக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக எவ்வித விசேட எஃப்.பி.ஐ (FBI) குழுவினரின் வருகையும் இலங்கைக்கு இடம்பெறவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் இன்று (23) உத்தியோகபூர்வமாகத் […]
தடைசெய்யப்பட்ட தமிழீழ வரைபடம், கொடிகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

இலங்கையின் போர் வெற்றி நாளை, இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என்றும், அதற்கு எதிராக தங்களது கட்சி கடுமையாக போராடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு, “யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வது தொடர்பில் எமக்கும் கவலை உள்ளது, மக்களின் அந்த நினைவேந்தல் உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால், அண்மையில் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் நினைவேந்தல் […]
“எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” வவுனியாவில் விழிப்புணர்வு நடைப்பயணம்

“எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான இந்த நடைபயணம் பழைய பேருந்து நிலையப் பகுதி வரை ஊர்வலமாக சென்றிருந்தது. இந்நடைபயணத்தில் இளைஞர், யுவதிகள் என பலர் கலந்துகொண்டதுடன், அவர்கள் போதை பாவனைக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
டொலர் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்

டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி நாட்டின் தேசிய சொத்துக்களை துண்டு துண்டாக விற்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி நாட்டைத் துண்டு துண்டாக […]