தடைசெய்யப்பட்ட தமிழீழ வரைபடம், கொடிகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

இலங்கையின் போர் வெற்றி நாளை, இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என்றும், அதற்கு எதிராக தங்களது கட்சி கடுமையாக போராடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு,

“யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வது தொடர்பில் எமக்கும் கவலை உள்ளது, மக்களின் அந்த நினைவேந்தல் உரிமையை நாம் மதிக்கின்றோம்.

ஆனால், அண்மையில் வடக்கிலும் ஏனைய சில இடங்களிலும் நினைவேந்தல் என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட தமிழீழ வரைபடம், கொடிகள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டு தான் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எமது முப்படையினர் தங்களது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த இந்த ஒற்றையாட்சி நாட்டில், பயங்கரவாத அடையாளங்களுடன் இவ்வாறு நினைவேந்தல்களை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

நாடாளுமன்றத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகி வந்துள்ள சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களைப் பேசி வருகின்றனர். அவர்கள் இத்தகைய இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

தற்சமயம் அவர்கள், இலங்கையின் போர் வெற்றி நாளை இனப்படுகொலை தினமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டின் ஒற்றையாட்சி அரசமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறியே இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவ்வாறிருக்கையில், இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை தினத்தைப் பிரேரிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இத்தகைய தேசவிரோதப் பிரகடனங்களுக்கு நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் கூட்டு எதிரணியாகத் தங்களது கட்சி மிகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி