அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகக் கூறுவது ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு சர்வாதிகார முயற்சி – விஜேதாச ராஜபக்ஷ

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாகவே, நிர்வாக அறிவு மற்றும் அரசியல் தெளிவற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை நாடு மீண்டும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வது சாத்தியமற்றது. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகக் கூறுவது ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு சர்வாதிகார முயற்சியாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் […]
அரச சார்பற்ற நிறுவன அதிகாரி என ஏமாற்றி கனடா வேலைவாய்ப்பு மோசடி; இளைஞர் கைது!

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் (NGO) பிரதிநிதி எனத் தன்னைப்போலியாக அடையாளப்படுத்தி, கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து பெருமளவிலான பண மோசடியில் ஈடுபட்ட 28 வயதுடைய நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) கைது செய்யப்பட்டுள்ளார். குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கனடாவிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர முடியும் எனக் கூறி, இளைஞர் மற்றும் யுவதிகளிடமிருந்து பெருந்தொகையான பணத்தைச் சேகரித்துள்ளதாகக் […]
வடக்கு ஆளுநர் நன்னீர் மீன்பிடி திட்டத்தை விரிவுபடுத்துமாறு பணிப்பு!
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அத்தோடு, இந்தத் திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.05.2026) காலை ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆளுநர் மேலும் […]
கனடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய மேக்ரோ-பொருளாதார சவால்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியைத் (Cyclone Ditwah) தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார தாக்கங்கள் குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடினின. பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய […]
யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட “அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” வேலைத்திட்டம்!!

அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” ” என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்வு இன்று(23.05.2026) காலை 7.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு இலங்கையில் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் யாழ். மாவட்டத்தில் கடற்கரையினை சுத்தப்படுத்தும் மாவட்ட நிகழ்வு பண்ணை கடற்கரையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் ‘Clean SriLanka’ திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு ஆகிய செயற்றிட்டங்கள் சிறப்பாக […]
: யாழுக்கு விஜயம் செய்துள்ள டில்வின் சில்வா
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இன்று (மே 23, 2026) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் ஜெ. ரஜீவன், மாநகர சபை உறுப்பினர்களான சு. […]
“கேரளா என்ன துபாயிலா இருக்கிறது?” – கனிமவள லாரி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

கன்னியாகுமரி: “சட்டம் என்பது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் ஒன்றுதான்; எல்லையில் லாரிகளை முடக்கித் தொழிலை அழிக்கக் கூடாது; கேரளா என்ன துபாயிலா இருக்கிறது? அங்கேயும் பொருட்கள் போகத்தான் செய்யும்” என்று கனிமவள லாரிகள் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மிக ஆவேசமாகப் பேசியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்குத் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதில், முறையான அனுமதியின்றிச் சட்டவிரோதமாகக் […]
மனித தலை கடற்கரையில் மீட்பு

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (23) காலை அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த மனித தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு ஆணின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் […]
நேட்டோ உறுப்பு நாடுகளிடையே ட்ரம்பின் முரண்பட்ட முடிவுகளால் குழப்பம்

ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவ வீரர்களை நிலைநிறுத்துவதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வரும் முரண்பட்ட முடிவுகளால் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே எழுந்துள்ள குழப்பத்தைத் தணிக்க அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ முயன்றுள்ளார். சுவீடனில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பேசிய அவர், உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படுவதாகவும், இது கூட்டணி நாடுகளுடன் கலந்தாலோசித்தே செய்யப்படுகிறது என்றும் விளக்கமளித்தார். சமீபத்தில் ஜெர்மனியுடனான அரசியல் மோதலால் அங்கிருந்து 5,000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் […]
கொங்கோவில் எபோலாவால் இளைஞர் உயிரிழந்த வைத்தியசாலைக்கு தீ வைத்த கும்பல்!

கிழக்கு கொங்கோவில் உள்ள ருவாம்பரா பொது வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எபோலா வைரஸால் உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்ல உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வைத்தியசாலை அனுமதிக்காத காரணத்தினால் இந்த வன்முறை வெடித்துள்ளது. கொங்கோவில் பெரும்பாலான எபோலா நோயாளர்கள் பதிவாகியுள்ள இடூரி (Ituri) மாகாணத்தில் உள்ள புனியா (Bunia) நகரத்துக்கு அருகில் இந்த ருவாம்பரா வைத்தியசாலை அமைந்துள்ளது. அந்த வைத்தியசாலையை நோக்கி […]