கொங்கோவில் எபோலாவால் இளைஞர் உயிரிழந்த வைத்தியசாலைக்கு தீ வைத்த கும்பல்!

கிழக்கு கொங்கோவில் உள்ள ருவாம்பரா பொது வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எபோலா வைரஸால் உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்ல உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வைத்தியசாலை அனுமதிக்காத காரணத்தினால் இந்த வன்முறை வெடித்துள்ளது.

கொங்கோவில் பெரும்பாலான எபோலா நோயாளர்கள் பதிவாகியுள்ள இடூரி (Ituri) மாகாணத்தில் உள்ள புனியா (Bunia) நகரத்துக்கு அருகில் இந்த ருவாம்பரா வைத்தியசாலை அமைந்துள்ளது.

அந்த வைத்தியசாலையை நோக்கி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டதால், வைத்தியசாலை ஊழியர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற மோதலின்போது கற்கள் வீசப்பட்டதில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் காயமடைந்ததாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு தீ வைக்கப்பட்டபோது வைத்தியசாலையில் தான் கண்ட காட்சியைப் பற்றி அங்குள்ள அரசியல்வாதியான லுக் மாலெம்பே ஊடகத்திடம் தெரிவிக்கையில், “அவர்கள் வைத்தியசாலையை நோக்கிப் பொருட்களை வீசி எறியத் தொடங்கினர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த கூடாரங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர்” என்றார்.

இந்த குழப்பத்துக்கு மத்தியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எபோலாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் மிகக் கடுமையான தொற்றுத் தன்மையைக் கொண்டது என்பதால், வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்குப் பாதுகாப்பான முறையில் உடல் அடக்கம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டியது அவசியம் என கூறப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர் உள்ளூர் சமூகத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபர் என்றும் அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந்தவர்கள், “இந்த நோயின் தீவிர நிலையைப் புரிந்துகொள்ளவில்லை” என்றும் இடூரி மாகாணத்தில் எபோலா பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞர் அந்நாட்டின் கால்பந்து வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பாக அவரது தாய் கூறுகையில், எனது மகன் எபோலாவால் இறக்கவில்லை. அவர் டைபொய்ட் காய்ச்சலால் தான் இறந்தார் என்றார்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்