மொன்-ட்ரெம்ப்ளான்ட் (Mont-Tremblant) பகுதியில் காணாமல் போன ஒன்ராறியோ வாலிபர் லியம் டோமனைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

ஒன்ராறியோவைச் சேர்ந்த லியம் டோமன் (Liam Toman) காணாமல் போய் ஒரு வருடத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் இணைந்து இந்த வார இறுதியில் மொன்-ட்ரெம்ப்ளான்ட் பகுதியில் புதிய வான் மற்றும் தரைவழித் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற தன்னார்வத் தேடுதல் குழுக்கள் மற்றும் ‘சார்கான் கே9’ (SARCAN K9 – மோப்ப நாய் பிரிவு) ஆகியவற்றின் உதவியுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தீவிரத் […]
தமிழீழ விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாடுமுழுவதும் நினைவுகூரப்படுவதை ஜனாதிபதி தடுக்க வேண்டும் – உதய கம்மன்பில

இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றும் உரையில், பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் குறித்து ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை அவர் வழங்கவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் […]
கெஹெலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதி மோசடி வழக்கு விசாரணை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான மருந்து இறக்குமதி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணைகள் நேற்று(19) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்தினை மோசடியாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் தொடர்பில் இன்றைய தினம்(19.05.2026) விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கில் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் […]
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையைத் தருகின்றது – இம்ரான் எம்.பி

இந்த அரசாங்கம் இனவாதத்தை ஒழித்து சகல சமூகங்களுக்கும் நியாயமான அடிப்படையில் செயற்படுவதாகக் கூறிக் கொண்டாலும் அது கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருவது கவலையைத் தருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாகும்.இந்த மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை பிரதம செயலாளராக நியமிக்கும் மனநிலை இந்த அரசாங்கத்திற்கு இல்லை. […]
யாழ் மாநகர சபைக்கும் தொழிற்துறைத் திணைக்களத்திற்கும் புதிய நியமனங்கள்

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (19) ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 29,589 டெங்கு நோயாளிகள் பதிவு – 15 மரணங்கள்

இந்த ஆண்டு 29,589 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் சமூக மருத்துவ நிபுணர் செல்வி பிரசீல சமரவீர, மே 18, 2026 நிலவரப்படி இதுவரை 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார். “அதிக அபாயம் உள்ள 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். மேலும், மேற்கு மாகாணத்தில் அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாவட்டங்களைப் பொறுத்தவரை, அனைத்து 25 […]
ரஷ்ய ஜனாதிபதி புடின் சீனா விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பீஜிங் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சீன விஜயத்தை நிறைவு செய்து ஒரு வாரம் நிறைவடைவதற்குள், இந்த ராஜதந்திர விஜயம் ஏற்பாடு […]