அரசாங்கம் விமல் வீரவன்சவை கைது செய்ய நடவடிக்கை?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக இன்று பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வீரவங்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் […]

போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயல்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று(19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த சட்டத் திருத்தங்களின் இறுதிக் கட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, சட்டத் திருத்தத்திற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் அதன் […]

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?

சென்னை: ​முதல்​வர் விஜய்​யுடன் 9 அமைச்​சர்​கள் மட்​டுமே பதவி​யேற்ற நிலை​யில், நாளை அமைச்​சரவை விரி​வாக்​கம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தமிழகத் தேர்​தலில் 108 இடங்​களைப் பிடித்த தவெக தலை​மை​யில் கடந்த மே.10-ம் தேதி புதிய ஆட்சி அமைந்​தது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றார். அவருடன் கே.ஏ.செங்​கோட்​டையன், ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே.பிரபு, நிர்​மல் குமார், கீர்த்​தனா ஆகியோர் அமைச்​சர்களாக பொறுப்​பேற்​றனர். தவெக பெரும்​பான்​மைக்கு வேண்​டிய 118 இடங்​களுக்​காக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், […]

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த கபிலவுக்கு பிணை நின்றவர்களிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை? – நீதவான் கேள்வி

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் பொலிஸார் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிசாரிடம் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பிய நீதவான், இதுவரை அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களோ அல்லது குறிப்புகளோ பெறப்படவில்லை என்றால் விசாரணைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்று வினவினார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி […]

அரசினர் விடுதியொன்றில் திடீர் வெடிப்பு

கெகிராவ பகுதியில் உள்ள அரசினர் விடுதியில் (Kekirawa Rest House) செவ்வாய்க்கிழமை (19) திடீர் வெடிப்புச்ம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த விடுதி ஊழியர் , சிகிச்சைக்காகத் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக விடுதியின் தளபாடங்களுக்கும், அதன் கூரைப் பகுதிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, வெடிப்பு நிகழ்ந்த இடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர் (Government Analyst) நேரில் […]

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ரூ.10,000 கொடுப்பனவு

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே […]

இறுதிப் போரின் மூலோபாயம் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டது – ஜெனரல் தயா ரத்நாயக்க

உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்த நாட்டின் மண்ணிலிருந்து வேரறுத்து ஒழிப்பதுக்கு அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியல், சமூக, பொருளாதாரத் தலைமைத்துவங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் கூட்டுச் சக்தியே பிரதான காரணமாக அமைந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான மூலோபாயத் திட்டமிடல்கள் அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையக […]

ஹால்டன் காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய துப்பாக்கிக் குவிப்பு மீட்பு: ‘புரொஜெக்ட் சைப்ரஸ்’ நடவடிக்கை

‘புரொஜெக்ட் சைப்ரஸ்’ (Project Cyprus) எனப் பெயரிடப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் விசாரணை நடவடிக்கையை அடுத்து, 24 கைத்துப்பாக்கிகளைப் (Handguns) பறிமுதல் செய்துள்ளதாக ஹால்டன் பிராந்திய காவல்துறை சேவை (Halton Regional Police Service) தெரிவித்துள்ளது. இது இக்காவல்துறை வரலாற்றிலேயே மீட்கப்பட்ட மிகப்பெரிய துப்பாக்கிக் குவியலாகும். ஹால்டன் பிராந்தியம், ரொறன்ரோ, யோர்க் பிராந்தியம் மற்றும் ஒஷாவா (Oshawa) ஆகிய பகுதிகளில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் உயர் மட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் குறிவைத்து கடந்த ஆறு மாதங்களாக […]

விசித்திரமாகத் தப்பியோடிய மத்திய கைதியைத் தேடும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் உள்ள பரோல் (Parole) சமூக குடியிருப்பு வசதி மையத்திலிருந்து கடந்த மே 19 அதிகாலை அனுமதியின்றி வெளியேறி, சட்டவிரோதமாகத் தலைமறைவாகியுள்ள 35 வயதுடைய ஜோயல் ரீட் (Joel Reed) என்பவரைக் கண்டுபிடிப்பதற்கு விக்டோரியா காவல் துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. ரீட்டைக் கைது செய்வதற்காக கனடா தழுவிய அளவிலான (Canada-wide warrant) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பயமுறுத்திப் பணம் பறித்தல் (Extortion), வீட்டை உடைத்துத் திருடுதல், $5,000க்குக் குறைவான திருட்டு, தடை உத்தரவை மீறி […]

மிசிசாகா (Mississauga) கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு: சந்தேகநபரைத் தேடும் காவல்துறை

மிசிசாகா நகரில் செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற கொடூர கத்திக் குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து, தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) தீவிரமாகத் தேடி வருகிறது. டண்டாஸ் வீதி மேற்குக்கு (Dundas Street West) வடக்கே உள்ள ஹுரோன்டாரியோ (Hurontario) மற்றும் அக்னஸ் (Agnes) வீதிகளுக்கு அருகில் இருவருக்குள் ஏற்பட்ட மோதல் குறித்து மதியம் 12:25 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்ததாக காவல்துறை […]