ரணவிரு நினைவுத்தூபி சம்பவத்திற்கான எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் முகங்கொடுக்கத் தயார்: விமல் வீரவங்ச
தேசிய ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் முகங்கொடுக்கத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறும் போதே, இன்று (20) அவர் ஊடகங்களிடம் இக்கருத்துக்களை வெளியிட்டார். நினைவுத்தூபிக்கு அருகில் நடந்த நிகழ்வு தொடர்பாக வழக்குத் தொடரப்பட வாய்ப்புள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ரணவிருகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி […]
நாடாளுமன்ற சபையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி சுமுகமாக முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சுரேஷ் சாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான சுரேஷ் சாலி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளுக்கு அமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இந்தச் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரிக்கத் திறன் விருத்தி செயலமர்வு
ரசியலில் பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் Search for Common Ground – SFCG அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான நிதியுதவியினை UNDP வழங்குகின்றது . இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பங்குதாரர் நிறுவனமான காவியா சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகம் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கான வலுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாக […]
களுவாஞ்சிக்குடியில் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகள் முன்னெடுப்பு
காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (20) விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலையிலிருந்து […]
சந்தேகநபரைக் கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தலங்கம, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரைக் கண்டறிவதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். சந்தேகநபர் பரகொட, இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ‘களு ஆரச்சிகே லியனகே நிலுக்ஷ வீரசிங்க’ (29 வயது) எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியன்று, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து, மோட்டார் காரில் வந்த […]
சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில்…
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய செயற்குழுவுடன் நட்புறவான கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்களில் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் இம்ரான் காவாஜா ஈடுபட்டதாக செயற்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கமானது புதிய செயற்குழுவை நியமித்ததுக்கு என்ன பதிலளிப்பு என சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானிக்கையிலேயே இலங்கைக்குக்கு காவாஜா விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையை வழமையான முழு உறுப்பினராக சர்வதேச கிரிக்கெட் சபை கருதுமென எதிர்பார்ப்பதாக செயற்குழுவின் உறுப்பினர் சிதத் வெத்தமுனி கூறியுள்ளார். அரசாங்கத் தலையீடு காரணமாக 2023ஆம் […]
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (19) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “2024ஆம் ஆண்டில் 711 மாணவர்களும், 2025ஆம் ஆண்டில் 885 மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் இடைவிலகல் தொடர்பான காரணங்களை ஆராய்ந்து, அவர்களை மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான (மீள்சேர்க்கை) நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு […]
தனியார் பேருந்து சில்லில் சிக்குண்டு இளைஞர் பலி
பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (20) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இளைஞன் மீது பேருந்தின் சக்கரம் […]
பால்மா விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.