இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு
உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பால்மாவின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் எடையைக் கொண்ட இறக்குமதி பால்மா பாக்கெட் ஒன்றின் விலை 50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோகிராம் எடையைக் கொண்ட பால்மா பாக்கெட் ஒன்றின் விலை 125 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை கலைந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அவருக்கு எதிராக போராட தயங்கோம் – யாழ். மீனவ அமைப்பு
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை (19) யாழில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ். மாவட்ட மீனவ மக்கள் […]
“தவெக கூட்டணி பேச வந்தவர்களை இபிஎஸ் உதாசீனப்படுத்தினார்!” – சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட சி.வி.சண்முகம் அதிரடி கெடு!
சென்னை: “சட்டமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தூது அனுப்பியும், கூட்டணி பேச வந்தவர்களை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உதாசீனப்படுத்தினார்; இதனால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், அதிமுக சிறப்புப் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான கெடு விதித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக-வில் வரலாறு காணாத பிளவு […]
“கரூர் கூட்டநெரிசல் விபத்து!” – டிஎஸ்பி உள்பட 19 காவல்துறையினரை அதிரடியாக இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!
சென்னை: கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த 3 டிஎஸ்பி-க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 19 காவல்துறையினரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டது. […]
“ரூ.2.5 லட்சம் கோடி கடன் இருந்தாலும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்!” – ஜூன் முதல் அமல் என அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!
சென்னை: “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருந்தாலும், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை வரும் ஜூன் மாதம் முதல் நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக வழங்கும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாக உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு (TNEB) நேரில் வருகை தந்து, துறையின் உயர் […]
“நிர்வாகத் தாமதத்திற்கு மக்கள் வாக்களிக்கவில்லை!” – முழுமையான அமைச்சரவை அமைக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் சாடல்!
சென்னை: “தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்தும் முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் காலதாமதம் செய்வது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமரிசித்துள்ளார். இதுதொடர்பாகப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள காரசாரமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுப் பல நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், முதலமைச்சர் விஜய் இதுவரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே […]
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களுக்காகத் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” மனநல ஆலோசனைத் திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தைப் போக்கி மனநலனைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டத்தின் கீழ் கட்டணமில்லா டெலி-கவுன்சிலிங் (Tele Counselling) ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2025-26ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் 9 லட்சம் பேர் […]
“உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து!” – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசரக் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய உரங்களைத் தடையின்றி உடனடியாக வழங்க மத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறை அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வேளாண்மையைத் தங்களது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மாநிலத்தில் சுமார் 48.27 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் […]
“விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது அதிரடி நடவடிக்கை!” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழகக் கூட்டுறவுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் (ஐகோர்ட்டு) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) […]
“கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!” – ₹2,500 கோடி நிதிக்கு மிரட்டும் மத்திய அரசுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
சென்னை: “மத்திய அரசின் நிதி அழுத்தங்களுக்கு அடிபணிந்து தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது; கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே தவெக அரசில் இடமில்லை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (SCERT), பள்ளிக்கல்வித்துறை சார்பாக 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்குப் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களுக்கான ‘ஆசிரியர் கையேடுகளை’ அமைச்சர் ராஜ்மோகன் முறைப்படி வெளியிட்டார். தொடர்ந்து, மாநில அளவிலான முதன்மைக் […]