தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படும் வவுனியா ஆலங்குளம்!

வவுனியா, ஆசிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஆலங்குளம் தனிநபர்களால், ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஆலங்குளம் பகுதியின் வரலாற்றினை முற்றிலும் அழித்து, அக்குளத்தினை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக ஆலங்குளத்தினை புனரமைப்பதற்காக கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், குறித்த அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இவ்விடயத்தில் அதிகாரிகள் […]
பெருந்தோட்ட நிறுவனங்களினால் மலையக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக அவதானம்

மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக காலத்திற்கும் பதிவாகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி இரத்தினபுரி நீலகாமம் தோட்டத்தில் […]
ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணம்

ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணத்தை விளக்கிய மத்திய வங்கி ஆளுநர் மத்திய கிழக்கின் நிலவும் நெருக்கடி நிலை மற்றும் அதன் விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்தமையே இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கு முதன்மைக் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர், எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவை அதிகரித்துள்ளமையினால் ரூபாவின் மீது […]
104 புதிய மெட்ரோ பேருந்துகள் இறக்குமதி

நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ (Metro) பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதற்குரிய ஒப்பந்தம் இன்று (18) கையெழுத்திடப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த 104 நவீன பேருந்துகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நிறைவு செய்யப்படவுள்ளன. தற்போது மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கடவத்தை மற்றும் ரத்மலானை போன்ற […]
பருத்தித்துறை, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் பெருந்தொகை கேரள கஞ்சா கைப்பற்றல்!

பருத்தித்துறை, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (18) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வல்லிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
“அதிமுக-வில் அடுத்த அதிரடி என்ன?” – தேர்தல் தோல்விக்கு பின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் அவசர ஆலோசனை!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பிளவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக-வுக்குள் பெரும் புயல் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், […]
செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி! தவெக அரசுக்கு அமலாக்கத்துறை 3 பக்க அவசரக் கடிதம்!

சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க அனுமதி கோரி தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை (ED) 3 பக்க அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது வேலைவாய்ப்பு மோசடி […]
“விஜய் சிஎம் ஆகணும்!” – 50 அடி ஆழக் கிணற்றில் மிதந்து நேர்த்திக்கடன் செலுத்திய தற்காலிக சபாநாயகர் கருப்பையா!

மதுரை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று, தளபதி விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதால், சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவெக கொடியுடன் மிதந்து (ஜல பிரதட்சணம்) தனது வினோத நேர்த்திக்கடனை அதிரடியாக நிறைவேற்றியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருப்பையா. இவர் தவெக அரசின் புதிய சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராகப் (Pro-tem Speaker) […]
“சுதந்திர தமிழீழம் காண ஐநா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு!” – வைகோ உணர்ச்சிமிகு அறிக்கை!

சென்னை: “மனிதகுல வரலாற்றிலேயே நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்யும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க, சுதந்திரத் தமிழீழம் காண்பதற்கான பொது வாக்கெடுப்பை ஐநாவின் மேற்பார்வையில் நடத்த வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதகுல வரலாற்றில் நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதாக முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு உலக நாடுகளின் கண்முன்னே பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிங்களப் […]
இலங்கை எம்பி ராமநாதன் அர்ச்சனா – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு!

சென்னை: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) இராமநாதன் அர்ச்சனா, தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இலங்கை நாடாளுமன்ற எம்பி இராமநாதன் அர்ச்சனா அவர்களை இன்று மரியாதை நிமித்தமாகத் தலைமைச் செயலக அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன். இந்த நட்பு […]