முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் நிதியுதவி! சிஎம் விஜய்யை நேரில் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (CMPRF) நிதியுதவியாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தவெக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கும், பொது நிவாரண நிதிப் பங்களிப்பிற்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், 10 லட்சம் ரூபாய்க்கான […]

“பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க மாட்டோம்!” – இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி அமைச்சர் ராஜ்மோகன் ஒரே வரியில் அதிரடி!

சென்னை: மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் மத்திய அரசின் ‘பிஎம்ஸ்ரீ பள்ளி’ (PM SHRI Schools) திட்டத்தை புதிய தவெக அரசு ஏற்றுக்கொள்ளாது என்பதைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஒரே வரியில் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் (NEP 2020) முக்கிய அம்சங்களைச் செயல்படுத்துவதற்காக நாடு முழுவதும் ‘பிஎம்ஸ்ரீ’ மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை முந்தைய திமுக அரசு கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள […]

“இருமொழிக் கொள்கைதான் தவெக அரசின் நிலைப்பாடு!” – முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த இந்திய மாணவர் சங்கம் பேட்டி!

சென்னை: “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் தவெக அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்” என இந்திய மாணவர் சங்க (SFI) மாநில நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது மற்றும் நிர்வாகிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் […]

“24 பேரைத் தூக்கிய எடப்பாடியார்.. அவரை மட்டும் விட்டது ஏன்?” – தவெக கு.ப.கிருஷ்ணன் பரபரப்புக் கேள்வி!

சென்னை: “சட்டசபையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் 24 பேரின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். ஆனால், ஒருவரது பதவியை மட்டும் அவர் பறிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை வெளியிட வேண்டும்” என்று தவெக டெல்டா மண்டல கண்காணிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி […]

“திமுக – அதிமுக இணைந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்!” – விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு அதிரடிப் பேட்டி!

சென்னை: “விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்கத் திரைமறைவில் பேசப்பட்ட திமுக – அதிமுக இணைப்பு முயற்சி தமிழ்நாட்டிற்கு நல்லதுதான்; இந்த நேரத்திலாவது விசிக தலைவர் திருமாவளவன் பெயர் முதலமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டது வரவேற்கத்தக்கது” என்று விசிக சட்டமன்றக் குழு தலைவரும் திண்டிவனம் எம்.எல்.ஏ-வுமான வன்னி அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் திருப்பங்கள் மற்றும் கூட்டணி நகர்வுகள் குறித்துத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் பல அதிரடித் தகவல்களைப் […]

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தவெக! டெல்லி வரை விரியும் தவெக அரசியல்!

டெல்லி: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த சில மாதங்களிலேயே, தமிழக வெற்றிக் கழகம் தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடத்தைப் பதிக்க அதிரடியாகத் தயாராகி வருகிறது. அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியாகியுள்ள அந்த இடத்திற்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தமிழகச் சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களைக் […]

ஈழத் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகம் நீதி வழங்குமா – வைகோ

மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் சில நாடுகளில் நடந்த இனப் படுகொலைகளில் மிகவும் கோரமானதும், கொடூரமானதும், நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதுமான படுகொலை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை ஆகும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் குறித்த பதிவில், வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து தனி அரசு அமைத்து வந்த ஈழத் தமிழினம், ஐரோப்பியர்கள் படையெடுப்பால் அரசு உரிமை இழந்து, குறிப்பாக பிரித்தானியர்களின் ஆதிக்க ஆட்சியால் சிங்களவர்களோடு இணைக்கப்பட்டு, அவர்கள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறியபோது சிங்களவர்களின் […]

“ஆட்சி மாற்றத்திற்கு வந்தவர்கள் அல்ல, அரசியல் மாற்றத்திற்கான புரட்சியாளர்கள்!” – தவெக அரசைச் சீமான் சரவெடி விமர்சனம்!

செங்கல்பட்டு: “நாங்கள் வெறும் ஆள் மாற்றத்திற்கோ, ஆட்சி மாற்றத்திற்கோ வந்தவர்கள் அல்ல; ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்திற்காகக் களம் கண்டுள்ள புரட்சியாளர்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் அதிரடியாகப் பேசியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட வாக்கு வங்கிச் சரிவு மற்றும் தவெக-வின் புதிய ஆட்சி குறித்துப் பேசிய சீமான், “இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு இப்போது காங்கிரஸின் துரோகம் நன்றாகத் தெரிந்திருக்கும். இவ்வளவு காலம் பதவிக்காக திமுக-வுடன் நின்ற காங்கிரஸ், இப்போது […]

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவம்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம், நோர்வே ராஜ்யத்தின் நிதி உதவி மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் தன்னார்வத் திட்டம் ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கிய, புதிய டிஜிட்டல் நட்டஈடு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக வினவல் பொறிமுறை நேற்று(18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான, மிகவும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சமூக ஆதரவு சேவைகளை வழங்கும் ஒரு செயல்முறையாகும். […]

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் இந்த கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.