“மனித நல்வாழ்விற்கு எதிரான போர்களை எதிர்ப்போம்!” – முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்!

சென்னை: “பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட ஈழ மக்கள், தங்களது நீதி மற்றும் நல்வாழ்க்கையைப் பெற முழு உரிமை உடையவர்கள்; மனித நல்வாழ்விற்கு எதிராக நடத்தப்படும் அனைத்துப் போர்களும் வன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவை” என்று தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதன் 17-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களால் உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக […]

நிதி மோசடி; சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு விசாரணை ஆரம்பம்!

2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ‘தெயட்ட கிருள’ (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது சுமார் 700 மில்லியன் ரூபா அரச நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சிரந்தி ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் 12 அரச அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2012ஆம் ஆண்டு அநுராதபுரம் மாயாகடுவவிலும் 2013ஆம் ஆண்டு அம்பாறை ஹார்டி கல்லூரியிலும் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சிகளின் போது குறிப்பிட்ட […]

இலங்கை தூதரகங்களுக்காக பொது இணையதளம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொது இணையத்தளத்தையும், நேற்று(18) அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் தொடங்கி வைத்தது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர், சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இணையவழியாக இணைந்திருந்த வெளிநாடுகளில் […]

தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த 3 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு

தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குறித்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளியில் இருந்து நுழைந்ததாகக் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. தமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க தேவையான செயல்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சவூதி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து ஈரான் மோதலின் போது நடந்த விரோதப் போக்குகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருப்பினும் ஈராக்கிலிருந்து சவூதி […]

முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி என்பதற்கு 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்ஹாசன்

முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி உள்ளது என இரண்டு நாட்களில் கருத்து சொல்வது ஜோசியமாகத் தான் இருக்க முடியும். ஆறு நாள், பதினைந்து நாட்களில் கருத்து சொல்வதும் அப்படித்தான் இருக்க முடியும். அவருக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும். புதியவர்கள் நிறைய பேர் […]

மீண்டும் உயரும் எண்ணெய் விலை

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று (18) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஐக்கிய […]

“கல்வியே சமூக மாற்றத்திற்கான சிறந்த சாதனம்”; சப்ரகமுவ மாகாணத்தில் மாபெரும் இலவச கருத்தரங்கு

“கல்வியே சமூக மாற்றத்திற்கான சிறந்த சாதனம்” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச கருத்தரங்கு  கடந்த ஞாயிற்றுக்கிழமை கஹவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பரீட்சையை எதிர்கொள்வதற்கான நேர்மறையான மனப்பான்மையும், அரச ஆசிரியர் நியமனம் பெறுவதற்கான உத்வேகத்தையும் அதிகரிப்பது காலத்தின் தேவையாக கருதப்படுகின்றது. இதனை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை […]

அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று (18) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்களில் ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் […]

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி; பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் […]

பத்தரமுல்லையில் ஜனாதிபதி தலைமையில் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம்

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட உயிர்நீத்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் 15ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம், இன்று செவ்வாய்க்கிழமை (19) பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முறை நிகழ்வுகளில் ஒரு விசேட மாற்றமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளுடன் இணைந்து பணியாற்றி உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாவீரர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதற்கு விசேட […]