போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முன்னெடுப்பு

போதைப் பொருளை ஒழிப்பதற்கான நாட்டில் தற்போதுள்ள ” முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய தம்பலகாமம் பொலிஸார் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நேற்று(18) திங்கட்கிழமை தம்பலகாமம் கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியில் நடைபெற்றது. திருகோணமலை – கண்டி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள், தனியார் வாகனங்களிலும் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதில் கந்தளாய் பிராந்திய உதவி […]

அந்தரே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டம் முடிவு!

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பில் உள்ள, மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்குப் பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்தரே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (18) பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்தரே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சசிந்து பெரேரா இதனை தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின்போது, குறித்த காணியை மிக விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு மாற்றுவதற்குத் […]

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் நேற்று(18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நினைவேந்தல் பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை அங்கிருந்து இனப்படுகொலையின் உயிர் வாழும் சாட்சியமாக வாழும் வர்த்தகர் க.யோகநாதன் பொதுச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கமும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளுடன் தான் எமக்கு பிரச்சினை; தமிழ் மக்களுடன் பகைமை இல்லை – நாமல் ராஜபக்ஷ

தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பகைமையும் கிடையாது. விடுதலை புலிகளுடன் தான் எமக்கு பிரச்சினை காணப்பட்டது.நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினருக்கு என்றும் உயரிய கௌரவமளிப்போம்.அதேபோல் எக்காரணிகளுக்காகவும் முப்படையினரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மல்வானை சொகுசு இல்லம் முன்னாள் அமைச்சர் பசில் […]

தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வியாழனன்று விசேட பாராளுமன்றக் கூட்டம் – அரசாங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்த அவலமான யுகம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, அண்மைய சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் வரும் 21ஆம் திகதி […]

புதிய வரைவு; ஈரான் எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டனில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்காகத் தயாரிக்கப்பட்டு வரும் புதிய வரைவு கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே தடைகளை நீக்குவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை செயல்முறையின் போதே சில தடைகளைத் தளர்த்த இது அனுமதிப்பதால், இந்த சமீபத்திய முன்மொழிவு முந்தைய முன்மொழிவுகளிலிருந்து வேறுபடுகிறது. இருப்பினும், ஒரு நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுவதற்கு, அமெரிக்கா விதித்துள்ள அனைத்துத் தடைகளும் […]