பருத்தித்துறை, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (18) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வல்லிபுரம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.