திட்டமிடப்பட்டிருந்த ஈரான் மீதான தாக்குதல் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – டொனால்ட் டிரம்ப்

ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த தற்காப்பு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தத் தாக்குதல் ஒத்திவைப்புக்கான காரணத்தை விளக்கினார். ஈரான் மீதான தாக்குதலுக்கு இறுதி அனுமதி வழங்குவதற்கு முன்னதாக, அதன் மூலம் ஏற்படக்கூடிய மனித உயிர்ச்சேதங்கள் மற்றும் பிராந்திய விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாக […]

பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

ரசிகர்களின் நெஞ்சாங்களை உலுக்கி, விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ‘டாடா ஐபிஎல் 2026’ (TATA IPL 2026) தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மகுடத்தைச் சூடப்போகும் அந்த ‘மகா சாம்பியன்’ யார் என்பதைத் தீர்மானிக்கும் பிளே-ஆஃப் (Playoffs) மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் தற்போது வெளியிட்டு, ரசிகர்களின் கிரிக்கெட் காய்ச்சலை மேலும் அதிகரித்துள்ளது! விளையாட்டு மைதானத்தில் நேரடியாக அமர்ந்து தங்களுக்குப் பிடித்தமான அணிகளை ஆரவாரம் செய்து ஆதரிக்கக் காத்திருக்கும் ரசிகர்களின் […]

யாழில் விசாரணைக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஒருவர், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியை சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே வீதி (ஒழுங்கை) எல்லை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய, பொலிஸார் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை […]

ஜெனீவா ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கக்கூடாது

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா ஊடாக தீர்வு வழங்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்துள்ளார். எமது நாட்டின் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளவேண்டும். உள்ளக முறைமையின் ஊடாகவே தீர்வு வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எபோலா வைரஸ் பரவல் தீவிரம் ; சுமார் 120 பேர் பலி

கொங்கோவில் பரவி வரும் அரிய வகை எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு எபோலா நோய்ப் பாதிப்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்நாட்டில் தற்போதைய நோய் நிலைமை மிக வேகமாக மாறி வருவதாகவும், வரும் வாரங்களில் கூடுதல் பாதிப்புகள் கண்டறியப்படலாம் என்றும் அங்குள்ள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த கிழக்கு இத்தூரி (Ituri) மாகாணத்தில் மூன்று புதிய சிகிச்சை மையங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதே வேளை […]

32ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை முறியடிப்பு

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார். ’14 பீக்ஸ் எக்ஸ்பெடிஷன்’ நிறுவனத்தின் ஊடாக வருகை தந்த மலையேற்றக் குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற 56 வயதான காமி ரீட்டா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) முற்பகல் 10:12 மணியளவில் 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். […]

கனடாவின் முதலாவது ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையைத் தொடர்ந்து, கனடாவின் முதலாவது ‘ஆண்டிஸ் ஹண்டாவைரஸ்’ (Andes hantavirus) தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிக் உல்லாசக் கப்பல் (Antarctic cruise ship) ஒன்றில் அரிய வகை ஹண்டாவைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு ஆளாகி, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்ட நான்கு கனடியர்களில் ஒருவருக்கு அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவருக்கு அண்மையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சுகாதார […]

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கை செய்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் […]

சந்தையில் சீனி விலையும் உயர்வு?

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஏற்றுமதித் […]

நெல்லியடியில் சங்கிலி பறித்து தப்பிய கொள்ளையர்கள் கைது!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர். இருந்த போதிலும், மோட்டார் சைக்கிள் […]