சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு சீல்; முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து, சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்றைய தினம்(18.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் துக்குடியிருப்பு நகரை அண்டிய உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளார். இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை, ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகள் வைக்கப்பட்டமை, பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்காமை, மருத்துவ சான்றிதழ் இன்றி […]
டொராண்டோ மிட்-டவுன் (Midtown) பகுதியில் நடந்த இரண்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்; சந்தேக நபரைக் தேடும் காவல்துறை

கடந்த வாரம் டொராண்டோவில் தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரின் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் மே 15ஆம் தேதி மதியம் ‘யோங் ஸ்ட்ரீட்’ (Yonge Street) மற்றும் ‘செயின்ட் கிளேர் அவென்யூ ஈஸ்ட்’ (St. Clair Avenue East) ஆகிய பகுதியின் சுற்றுவட்டாரத்தில் நடந்துள்ளன. அன்று மாலை 4:15 மணியளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]
பயங்கரவாத நிதியுதவிக்கான திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பதற்கான திருத்தச் சட்டமூலம், இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை இன்று(19.05.2026) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பிறப்பித்துள்ளார். அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பதற்கான திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, அரசியலமைப்பின் 12/1 சரத்தின் பிரகாரம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு […]
கனடாவில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகளின் ‘பயணப்பை அடையாள அட்டை’களை (Luggage Tags) மாற்றி அரங்கேறும் மோசடி; மரண தண்டனை விதிக்கும் நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படும் அதிர்ச்சித் தகவல்

கனடாவிலிருந்து உலகின் பல நாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகளின் ‘பேக்-டேக்’ (Bag-tag) எனப்படும் பயணப்பை அடையாள அட்டைகளை ரகசியமாக மாற்றி, அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் பழி விழும் வகையில் அரங்கேறும் அதிர்ச்சிகரமான மோசடிகள் குறித்து CTV நியூஸின் ‘W5’ புலனாய்வுக் குழு விரிவான விசாரணை நடத்தியுள்ளது. கனடிய விமான நிலையங்களுக்குள் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் W5 குழுவின் நான்கு பகுதிகள் கொண்ட புலனாய்வுத் தொடரின் முதல் பகுதி இதுவாகும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், கனடாவிலிருந்து […]
ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (19.05.2026) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமீபத்தில் நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால் பதிக்கும் போதுதான், இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை. முன்னர் நான் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் […]
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று திங்கட்கிழமை (18) இலங்கை வந்தடைந்தார். அவர் மே 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (19) காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் அவர் மலரஞ்சலி செலுத்தினார்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்

தற்போது இஸ்ரேலிய இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பு குறித்து கொழும்பிலுள்ள சிவில் சமூக அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தமது தீவிர கவலைகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவரை விடுவிப்பதற்கும் தேவையான இராஜதந்திர ரீதியிலான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசிடமும் வெளிவிவகார அமைச்சிடமும் கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் உள்ள வெளிவிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று (19) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காசா […]
வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம்: தாதி கைது
கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில், அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் 24 வயதுடைய குறித்த செவிலியருக்கும் இடையில் சில காலம் […]
பொன்சேகாவுக்கு சபையில் நன்றி தெரிவித்தார் மஹிந்த

நாட்டில் நிலவிய கொடூர பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் சபையில் உத்தியோகபூர்வமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தனது உரையின் போதே இந்த நன்றியறிதலைத் தெரிவித்தார். முப்பதாண்டு காலப் பயங்கரவாதத்தை நிறைவுக்குக் கொண்டுவருவதற்காகப் போர்க்களத்தில் தியாகத்துடன் போராடிய ஒட்டுமொத்த இராணுவத்தினருக்கும் இதன்போது அவர் […]
எரிபொருள் விநியோக QR குறியீட்டு முறை தொடரும்

எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறை (QR Code) தொடர்ந்தும் அமல்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த செவ்வாய்க்கிழமை (19) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அதற்கமைய , ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோக அளவு (Quota) விபரம் மோட்டார் கார் – 25 லீட்டர் முச்சக்கர வண்டி – 20 லீட்டர் […]