அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பதற்கான திருத்தச் சட்டமூலம், இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை இன்று(19.05.2026) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பிறப்பித்துள்ளார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பதற்கான திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, அரசியலமைப்பின் 12/1 சரத்தின் பிரகாரம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு எந்தவகையிலும் முரணானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு விதியோ, அல்லது ஒட்டுமொத்த சட்டமூலமோ அரசியலமைப்புக்கு எந்த வகையிலும் முரண்பட்டிருப்பதாக தென்படவில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.