“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறது தவெக!” – முதல்வர் விஜய்யின் ‘தூய சக்தி’ முழக்கத்தை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி ‘அரசியல் நாகரிகம்’ என்ற போர்வையில் ‘அழுக்கு அரசியலில்’ ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில், “தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எங்களது தோழமைக் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளித்தன. ஆனால், அந்த நம்பிக்கையை ஆளுங்கட்சி சிதைத்துவிட்டது. ‘Clean […]

“அண்ணா, எம்ஜிஆர் வரிசையில் விஜய்!” – நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி!

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு 144 வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழக வரலாற்றில் இது ஒரு புதிய புரட்சி என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ஆதவ் அர்ஜுனா தனது பதிவில், “1967-ல் அண்ணா ஏற்படுத்திய புரட்சியும், 1977-ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்த்திய சரித்திர சாதனையும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது. […]

மே மாதத்தில் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஷெர்பா வழிகாட்டியான 21 வயது புரு கியால்ஜென், எவரெஸ்ட் சிகரத்தின் 7,200 மீட்டர் உயரத்தில் உள்ள ‘கேம்ப் III’ பகுதியில் பனியில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த இரண்டு வாரங்களில் எவரெஸ்டில் நிகழ்ந்த மூன்றாவது மரணம் இதுவாகும். இதற்கு முன்னதாக, பிஜய் கிமிரே விஸ்வகர்மா (35) […]

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் திருமலையில் முறைப்பாடு

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தனது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த குறித்த தாய், கடந்த ஏப்ரல் மாதம் 09-ஆம் திகதி பிரசவத்திற்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது பிரசவம் நடைபெற்ற நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்துத் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள தாயார், அங்கு கடமையிலிருந்த வைத்தியர்களின் பாரிய கவனக்குறைவு காரணமாகவே […]

முதல் அனர்த்த மரணம் மட்டக்களப்பில் பதிவு

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (13) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் […]

பாடசாலையில் கத்திக்குத்து: 5 மாணவர்கள் காயம்

ப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தாக்குதலை நடத்தியவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் பயிலும் ஒரு மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை […]

பறிக்கப்பட்ட நிலங்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஒன்றிணைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில உரிமை தொடர்பான ஒருங்கிணைந்த கள விஜயமும் ஒன்றிணைவுக் கலந்துரையாடலும் இன்று (13) நடைபெற்றன. இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புகள், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நில உரிமைக்காக செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன், […]

கால்வாயில் விவசாயி ஒருவர் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர், கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வாகனேரி, குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். குறித்த விவசாயி, மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வயலுக்குச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடியபோது, கால்வாயில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு […]

நாட்டில் கடந்த ஆண்டு 68 யானைக்கால் நோய் நோயாளிகள் அடையாளம்

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய 7 பிரதான மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் வைத்தியர் […]

ஈரானுக்கு உதவிய குற்றச்சாட்டில் பஹ்ரைனில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ஈரானுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு பஹ்ரைன் உயர் குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற பெண், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்பில் இருந்ததாகவும், பஹ்ரைனில் “பயங்கரவாதத் தாக்குதல்களை” நடத்தத் திட்டமிட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மற்றுமொரு வழக்கில், ஈரானிய உளவு அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்தது மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நிதி பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக இருவருக்கு ஆயுள் தண்டனை […]