ஈரானுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு பஹ்ரைன் உயர் குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை பெற்ற பெண், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்பில் இருந்ததாகவும், பஹ்ரைனில் “பயங்கரவாதத் தாக்குதல்களை” நடத்தத் திட்டமிட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மற்றுமொரு வழக்கில், ஈரானிய உளவு அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்தது மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நிதி பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மேலும் 10 பேருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
ஈரானின் தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவித்தது, தடைசெய்யப்பட்ட இடங்களைப் புகைப்படம் எடுத்தது மற்றும் ரகசியத் தகவல்களைப் பரப்பியது போன்ற குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு தலா 2,000 பஹ்ரைன் தினார் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்த பிறகு, இவர்களில் மூன்று பேர் பஹ்ரைனில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
ஈரானுடனான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு பஹ்ரைன் அரசு இந்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.