ஹெரோயினுடன் கைதான இளைஞனுக்கு உடல்நலக்குறைவு; யாழில் சம்பவம்

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று (12) 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர். கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (13) காலை அவருக்கு உடல் […]

முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சி பரிமாற்றம்!

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு நேற்று (12) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினரால் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை கட்டடம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது. இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

“தவெக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது!” – நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வெற்றி ‘குதிரை பேரத்தின்’ வெளிப்பாடு எனச் சாடியுள்ளார். “தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசு, இன்று சபையில் பெரும்பான்மையை நிரூபித்திருப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியது. தூய சக்தி […]

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி; ஹேக்கர்கள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் முதல்முறையாக கருத்து

நிதி அமைச்சிற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடிக்காரர்களின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக, மீண்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் இருக்க மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நிதி அமைச்சுடன் இணைந்து […]

இளம் பெண்ணைக் கடத்த முயன்ற உறவினர்கள் கைது

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் கடத்த முயன்ற உறவினர் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் இதற்காகப் பயன்படுத்திய விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த (07) ஆம் திகதி மத்தேகொட, கிரிகம் பமுனுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இந்த விளையாட்டுத் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள் இருவரும், அங்கிருந்த இளம்பெண்ணைக் கடத்த முயன்றுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த மற்றொருவர் அதற்கு எதிர்ப்புத் […]

சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு; 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. நேற்று இரவு 10.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட சமீபத்திய நிலைமை அறிக்கையின்படி, நான்கு மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 62 […]

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிப்பு

இனப்படுகொலை நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிய ஆகிய நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மக்களினுடைய உயிர் காத்த ஒரு உணவாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவு கூர்ந்து  முள்ளிவாய்க்கால் வாரத் தொடக்க நாளில் வல்வெட்டி துறையில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சினை மக்களுக்கு வழங்கி வைத்தது. தொடர்ந்து நெல்லியடி கொடிகாமம் ஆகிய பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் மாவட்ட […]

சீரற்ற காலநிலை: மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) இன்று காலை 10.00 மணிக்கு வெளியிட்ட நிலைமை அறிக்கையின்படி, மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்குப் பகுதியிலேயே இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இரத்தினபுரி, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 203 பேர் இந்த மோசமான காலநிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 07 குடும்பங்களைச் சேர்ந்த பதினேழு (17) நபர்கள் […]

வலி.வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானி எப்போதூ இரத்தாகும் ஆளுநரிடம் கேள்வி?

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் வட மாகாண ஆளுநருக்கும் ‘அபிவிருத் திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின்’ பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாட லொன்று நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும், மக்கள் மன்றப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இச்சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இராணுவக் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் உள்ள பொதுமக்கள் மற்றும் […]

நான் வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகிறது, அதற்குள் மீண்டும் என்னை உள்ளே தள்ளப் பார்க்கிறார்கள்”

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு சற்று முன்னர், “நான் வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகிறது, அதற்குள் மீண்டும் அவர்கள் என்னை உள்ளே தள்ளப் பார்க்கிறார்கள்” என்று பலமுறை கூறியதாக, அவரது சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த மரண விசாரணை விசாரணையின் போது சாட்சி அரவிந்த டி சில்வா நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான சாட்சியப் பதிவின் போது, அவரது மனைவியின் சகோதரியான […]