தொலைதூர விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறைக்காது என அரசாங்கம் அறிவிப்பு

விமான எரிபொருள் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் தமது விமான சேவைகளைக் குறைத்து, செயல்பாடுகளைச் சுருக்கி வரும் நிலையில், சர்வதேச விமான நிறுவனங்கள் பல இக்கட்டான சூழலை எதிர்கொண்ட போதிலும், இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது தற்போதைய சர்வதேச வழித்தடங்கள் எதனையும் குறைக்காமல் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடனுக்கு எரிபொருள் பெறுவதற்கான […]

சட்டசபையில் விஜய் அதிரடி வெற்றி! 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு!

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற அக்னிப்பரீட்சையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அமோக வெற்றி பெற்றுள்ளது. அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை தொடங்கிய வாக்கெடுப்பில், உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் ‘டிவிஷன்’ (Division) முறை பின்பற்றப்பட்டது. அவையின் கதவுகள் மூடப்பட்டு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 […]

வடமாகாண ஆளுநர் அவுஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு – போர் முடிவடைந்த பின்னரும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாதமை குறித்து ஆராய்வு

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் […]

சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!

சென்னை: தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இன்று காலை சட்டசபை கூடியதும், முதலமைச்சர் விஜய் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தற்போது இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். இதில் முக்கிய திருப்பமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் குழு, தவெக அரசுக்கு […]

“எடப்பாடி பழனிசாமியையும் முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும்!” – திருமாவளவன் முன்வைத்த புதிய விருப்பம்!

சென்னை: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்திக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். நேற்று நீலாங்கரையில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார். திருமாவளவன் கூறுகையில், “முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வருவது ஒரு முதிர்ச்சியான அணுகுமுறை. இதேபோல் அவர் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள […]

எதிர்க்கட்சியும் தலைமைத்துவமும்: ஹர்ஷ டி சில்வா விசேட அறிக்கை

அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடனேயே தாம் அரசியலுக்கு வந்ததாகவும், தற்போதைய வதந்திகளுக்கு மாறாக தாம் ஒருபோதும் அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: அரசியல் நிலைப்பாடு குறித்து: தனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை என்றும், இலங்கையை ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தினால் மட்டுமே தான் […]

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்தார் பல்லேகம ஹேமரதன தேரர்

15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அட்மஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் வலுவாக மறுத்துள்ளார். இதேவேளை, சட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக சந்தேக நபரான தேரருக்கு எதிராகப் புதிய விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பிக்க அநுராதபுரம் தலைமை நீதவான் செவ்வாய்க்கிழமை (12) மறுத்துவிட்டார். அநுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சிசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் வெளியானது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விபரங்கள்: […]

தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

மே 12 தொடக்கம் 18 வரையான ஒரு வார காலப்பகுதியானது முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த தமிழ் மக்களை நினைவு கூரும் முகமாக தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய கஞ்சி சமைத்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளுக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தாய்லாந்தில் இருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருள்களைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும், எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் சுபாணி அபேசேகர நேற்று(12) உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த இந்தப் பிக்குகள், அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள […]

சமூக வலைத்தளங்களில் யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் தவறான செய்திகள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி கருத்து

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் , மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே முறையற்ற செய்திகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலாவதாக வைத்தியசாலைக்கு வெளியே உள்ள அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று […]