சென்னை:
தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி ‘அரசியல் நாகரிகம்’ என்ற போர்வையில் ‘அழுக்கு அரசியலில்’ ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில், “தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எங்களது தோழமைக் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளித்தன. ஆனால், அந்த நம்பிக்கையை ஆளுங்கட்சி சிதைத்துவிட்டது. ‘Clean Politics’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து, அவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர். இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என மக்கள் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “Starting-யே இப்படி இருந்தால், Finishing எப்படி இருக்கும்? விலை போன அதிமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் என்ன ‘ரிட்டன் கிப்ட்’ கொடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த நிலையில், ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
#MKStalin #DMK #OppositionVoice #VijayAsCM #TVK_Government #BreakingNews #May13 #TamilNaduPolitics #CleanPoliticsVsDirtyPolitics #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #StalinVsVijay #PoliticalCritique #AiadmkSplit #HorseTradingAllegation #FortStGeorge #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`