இலங்கையில் இணையவழி நிதி மோசடி: வெளிநாட்டவர்கள் 19 பேர் கைது

கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி இணையம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 18 சீன தேசியவாதிகள் மற்றும் பெரு (Peru) நாட்டுப் பெண் ஒருவர் கொம்பனித்தெரு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஆப்பிள் (Apple) ரக கையடக்க தொலைபேசிகள் 399, மடிக்கணினிகள் (Laptop) 14, மேசை கணினிகள் (Desktop) 02, பணம் 473,870 ரூபாய், வரி விலக்கு அளிக்கப்பட்ட வெளிநாட்டு புகையிரதங்கள் 600 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் குழுவொன்று […]
துறைமுகத்திற்கு அருகில் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் எனவும், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடி வைத்துள்ளவர் எனவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த போது கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு (Brown) நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் உரிய திகதியில் ஆஜராக தயார் – மஹிந்த

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் […]
அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான ஈரானின் வியூகங்கள் மற்றும் 14 அம்சத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஈரான் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஈரானின் இந்தப் போர்த் திட்டத்தின் முதல் கட்டம், அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, தெற்கு லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், […]
எல்லைப் போர் காரணமாக சுமார் 34,000 பேர் வரையிலான கம்போடியர்கள் இக்கட்டில்!

கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. கம்போடிய உள்விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த மாதம் வரை சுமார் 34,440 பேர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் 11,355 பேர் சிறுவர்கள் என்பது […]
மழையுடனான வானிலை; அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு (10) இன்று இடம்பெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர, டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் […]
தெற்கு அதிவேக வீதியில் விபத்து

பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த – கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் குழுவினர் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோதிய வேகத்தில் குறித்த […]
திரு மருதப்பு தர்மபாலன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, சுன்னாகம், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு மருதப்பு தர்மபாலன் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவகாமிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், பாலகுகன், கவிதா, பார்தீபன், சுஜீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கவிதா, மயூரன், யோகப்பிரியா, நகேந்திரன்(ராஜா) […]
நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்

‘புரூஸ் லீ ‘, ‘மாமன்’ ஆகிய திரைப்படங்களையும், ‘லக்கி’, ‘விலங்கு: ஆகிய இணைய தொடர்களையும் இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் – ‘வாரண்ட்’ எனும் இணைய தொடர் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரண்ட்’ எனும் இணைய தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் ,பாலாஜி சக்திவேல் , கௌசல்யா, காளி வெங்கட் , நம்ரிதா , அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் […]
மே 14ம் திகதி திரைக்கு வருகிறது கருப்பு

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக கருப்பு பட ட்ரெய்லர் தயாராக இருந்தாலும் அதை வெளியிடாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. ட்ரெய்லருக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. ஆனால் கருப்பு ட்ரெய்லரை எங்கய்யா காணோம் ஆர்.ஜே. பாலாஜி என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் தான் சூர்யா […]