அமெரிக்காவின் புதிய திட்டத்தைத் தீவிரமாக பரிசீலித்து வரும் ஈரான்!

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் புதிய திட்டத்தைத் தீவிரமாக பரிசீலித்து வரும் ஈரான்! மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை ஈரான் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர, 14 அம்சங்களைக் கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவுத் திட்டத்தை தாங்கள் தற்போது மதிப்பாய்வு […]

‘சிறி’ மென்பொருளால் ஆப்பிள் நிறுவனத்திற்கு நஷ்டம்

சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பங்குதாரர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பீட்டர் லேண்ட்ஷெஃப்ட் என்பவரால் கலிபோர்னியாவின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் (WWDC) ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை, அதே நாளில் வெளியிடப்பட்ட […]

மாநகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பதவி விலகல்  

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார். மாநகர சபைக்குள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் குறைக்க முடியாமையினால் தாம் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் அதிக […]

லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு!

ற்று புதன்கிழமை (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லாஃப் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய விலைகளாக, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6,245 ரூபாவாகும். 5 கிலோகிராம் எடையுள்ள சிறிய ரக எரிவாயு சிலிண்டரின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,500 ரூபாவாகும். விலை அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ […]

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது

புத்தளம், பெரியபாடு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 618 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ‘தம்பபண்ணி’ கடற்படை கப்பல் பிரிவினர் பெரியபாடு கடலோர பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் (Cab) வண்டியொன்றை சோதனையிட்டபோது, கடத்த முயன்ற பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 20 பைகளில் பொதி […]

“தவெக ஆட்சிக்கு 6 மாதங்கள் இடையூறு இல்லை” – மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி; ‘ரிசார்ட்’ அரசியலுக்கு முற்றுப்புள்ளி!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் அரசியல் இழுபறிக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க திமுக எந்த விதத்திலும் இடையூறு செய்யாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வும் திமுக-வும் ரகசியமாக கை கோர்த்துள்ளதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஸ்டாலினின் […]

கதறி அழுத ஜீவாவை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய விஜய்! தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்குத் திரையுலகினர் இறுதி அஞ்சலி!

சென்னை: ராஜஸ்தான் கார் விபத்தில் மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சௌத்ரியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய், தந்தையை இழந்து வாடும் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். அப்போது விஜய்யை கட்டிப்பிடித்தபடி நடிகர் ஜீவா கதறி அழுதது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களான […]

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: புதுச்சேரி சொகுசு விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள்!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு இடையே, அதிமுக தனது புதிய எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளது. தவெக-விற்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக-வின் வெளி ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக தீவிரம் காட்டி வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 இடங்களை வென்றுள்ள தவெக-விற்கு, காங்கிரஸின் 5 இடங்களையும் சேர்த்து 112 பலம் உள்ளது (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால்). […]

வெற்றியைத் தவறவிட்ட அந்த 12 இடங்கள்! தவெக-வின் பெரும்பான்மை கனவைத் தடுத்த ‘நூலிழை’ தோல்விகள்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட முடியாமல் போனதற்கு 12 தொகுதிகளில் ஏற்பட்ட நூலிழைத் தோல்விகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. இந்தத் தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தால், தற்போது நிலவும் அரசியல் இழுபறி இன்றி விஜய் நேரடியாகப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்க முடியும். தேர்தல் முடிவுகளின்படி, திருக்கோவிலூரில் வெறும் 285 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக […]

ஏன் அழைக்கவில்லை ஆளுநர்? – விஜய்யின் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காததற்கான பரபரப்பு காரணங்கள் வெளியாகியுள்ளன. 108 இடங்களுடன் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் சேர்த்து 113 இடங்கள் விஜய்யிடம் உள்ளன. இருப்பினும், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்துள்ளதால் பலம் 112-ஆகக் குறைந்துள்ளது. சபாநாயகரைத் தவிர்த்து 118 என்ற மேஜிக் எண்ணிக்கையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் தேவைப்படுவதால், முழுமையான ஆதரவு […]