கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு
கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ராஜஸ்தான் ரோயல்ஸின் புதிய உரிமையாளராக லட்சுமி மிட்டல்

ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாகவும் இலங்கை அணி முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார பயிற்றுவிப்பாளராக செயற்படும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் பெரும்பான்மை பங்குகளை, உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தலைமையிலான குழுமம் வாங்கியுள்ளது. சுமார் 1.65 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 15,600 கோடி ரூபாய்) மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முன்னதாக கல் சோமானி தலைமையிலான குழுமத்துடன் பேசப்பட்ட ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில், தற்போது லக்ஷ்மி மிட்டல், அவரது […]
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற குஜராத்

ந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: குஜராத் பஞ்சாப்: 163/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுர்யன்ஷ் ஷெட்ஜே 57 (29), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 40 (31), மார்கோ ஜன்சன் 20 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 4/24 [4], ககிஸோ றபாடா 2/22 [4], மொஹமட் சிராஜ் 2/28 [4], ரஷீட் கான் 1/32 [4]) […]
2026 ஆம் ஆண்டுக்குரிய வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் முழுமையடையவில்லை

2026 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் இடமாற்றங்கள் வட மாகாணத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அருள்வதனன் டினோசன் தெரிவித்துள்ளார். சேவையின் தேவையை முன்னிட்டு இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மட்ட இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் காரணம் உண்மைக்கு புறம்பானதாகவும் தவறானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வழமையாக ஆசிரியர் இடமாற்றங்கள் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வர […]
கம்பன் விழாவில் ஜனாதிபதிக்கு விருது!

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார். நேற்று (03) பிற்பகல் கம்பன் விழாவானது வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் […]
தமிழ் மக்களுக்கான நியாயங்களை நினைக்காத எமது ஜனாதிபதி அமெரிக்க – ஈரான் போர் தொடங்கியதும் மனிதநேயம் பற்றிப் பேசுகிறார்!

“ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனிதநேயம் என்பது ‘ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடி’ என்பது போன்றதே,” என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “அண்மையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, போரின்போது மனிதநேயத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், யுத்தத்தைத் தவிர்க்கச் சமாதானம் அவசியம் என்றும், தனது ஆட்சியில் மனிதநேயத்திற்கே முதலிடம் என்றும் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த உரை ‘ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி […]
நாயன்மார்க்கட்டில் கசிப்பு விற்ற பெண் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆண் , பெண் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 20 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது. நாயன்மார்க்கட்டு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் நீண்டகாலமாக இவ்வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
ஹாமில்டன்: வீடுபுகுந்து தாக்க முயன்றபோது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர் – 29 குற்றச்சாட்டுகள் பதிவு

கனடா, ஹாமில்டன் நகரில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 38 வயதுடைய நபர் ஒருவர், தவறுதலாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதையடுத்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி: கடந்த மே 2 ஆம் திகதி இரவு 9:30 மணியளவில், ஹாமில்டனின் லேண்ட்ஸ்டேல் (Landsale) பகுதியில் உள்ள ஸ்டீவன் வீதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலத்த துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒருவரைக் கண்டெடுத்து […]
GTA துப்பாக்கி விசாரணை: 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்பு – ஒருவர் கைது

டொராண்டோ மற்றும் ஏஜாக்ஸ் (Ajax) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸ் சேவை அறிவித்துள்ளது. சுற்றிவளைப்பு மற்றும் மீட்பு: கடந்த ஏப்ரல் 29 அன்று, துப்பாக்கி மற்றும் கும்பல் எதிர்ப்பு அதிரடிப்படையினரால் (Integrated Gun and Gangs Task Force) சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பின்வருவன கைப்பற்றப்பட்டன: ஆயுதங்கள்: ஐந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று. போதைப்பொருட்கள்: கொக்கைன் (Cocaine), கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் […]
டொராண்டோ துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை – 67 வயது நபர் மீது வழக்குப்பதிவு

டொராண்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அது தொடர்பான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தின் விபரங்கள்: நேரம் மற்றும் இடம்: கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி நண்பகல் 12:24 மணியளவில், டொராண்டோவின் மார்லி அவென்யூ (Marlee Avenue) மற்றும் கிளென்க்ரோவ் அவென்யூ வெஸ்ட் (Glengrove Avenue West) சந்திப்புப் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்: துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட 47 […]