நோவா ஸ்கோடியாவில் இரு சிறுவர்கள் காணாமல் போய் ஓராண்டு நிறைவு: நீதிகோரி பேரணி

நோவா ஸ்கோடியாவில் (Nova Scotia) இரு சிறுவர்கள் காணாமல் போய் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்த பதில்களைக் கோரி ஸ்டெல்லார்டன் (Stellarton) பகுதியில் உள்ள கனடிய அரச பொலிஸ் (RCMP) பிரிவுக்கு முன்பாக சுமார் 50 பேர் கூடிப் பேரணி நடத்தினர். சம்பவத்தின் பின்னணி: ஆறு வயதுடைய லில்லி சல்லிவன் (Lilly Sullivan) மற்றும் அவரது நான்கு வயது சகோதரர் ஜாக் சல்லிவன் (Jack Sullivan) ஆகியோர், கடந்த 2025 மே 2 ஆம் திகதி […]

வாக்கு எண்ணும் 62 மையங்களிலும் 24 மணிநேர தடையற்ற மின்சாரம்: மின்வாரியம் அதிரடி ஏற்பாடு!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கத் தமிழ்நாடு மின்வாரியம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது தொடர்பாக மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். கோடைகாலம் என்பதால் தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவாக 23,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தற்போது சராசரி நுகர்வு […]

5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்; இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்ரல் 9 ஆம் […]

தேயிலை தோட்டங்கள் இலாப நோக்கத்துக்காக அழிக்கப்படுகின்றன

நுவரெலியா மாவட்டத்தில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேயிலை பயிர்செய்கையை அழித்துவிட்டு அதற்கு பதிலாக மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதால் நுவரெலியா பகுதி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று நுவரெலியா மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் தரிந்து ரத்னாநாயக்க தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, நுவரெலியா மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் தேயிலை பயிர்ச்செய்கை தற்போது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நீண்டகாலமாகப் பாதுகாக்கப்பட்ட பசுமையான தேயிலை மலைகள், குறுகிய கால இலாபத்தை நோக்கமாகக் கொண்ட மரக்கறி பயிர்ச்செய்கைக்காக வேரோடு […]

கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு முல்லைத்தீவு மீனவர்களைக் காணவில்லை!

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (03) மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், சனிக்கிழமை (02) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையாவது கரை திரும்பியிருக்க வேண்டும் ஆனாலும் நீண்ட நேரமாகியும் குறித்த இரு மீனவர்களும் […]

பூநகரி பிரதேச சபை உழவு இயந்திரம் சட்டவிரோத மணலுடன் கைப்பற்றல்!

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும் சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் முற்படுத்த பூநகரி பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்றவகையில் மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தினை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி சாரதியினையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்ததாக பூநகரி பொலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பூநகரி பிரதேச […]

போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய பிக்கு அநுர அரசுக்கு வாக்கு சேகரித்தவர் – சிங்கள ராவய

நாட்டு மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் மீதான நன்மதிப்பைச் சீர்குலைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட மர்மச் சூழ்ச்சியை அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அண்மையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் நேரடி அரசியல் தொடர்பு இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள சிங்கள ராவய அமைப்பின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் […]