பசுமை யாழ்ப்பாணம்” திட்டம் ஆரம்பம்: யாழ். மருத்துவச் சங்கம் மற்றும் நல்லூர் பிரதேச சபை கைகோர்ப்பு!

யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் (JMA) இன்று (2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை) “Green Jaffna Project” எனும் பாரிய மரநடுகைத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளான ஆடியபாதம் வீதி, பொற்பதி வீதி என்பன பசுமையாக்கப்படவுள்ளன: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக […]

இடமாற்றாலாகிச் செல்லும் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

கொழும்பிற்கு இடமாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேட் கொமாண்டர் ருவான் குணரத்ன அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.05.2026) காலை 11.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்தரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், மாவட்ட பிரதம கணக்காளர் […]

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை மற்றும் மாலைதீவு இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கு இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மே 04 அன்று இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி முய்ஸுவுக்கான உத்தியோகபூர்வ […]

ஒக்லஹோமா விருந்துபசார நிகழ்வில் துப்பாக்கிச் சூடு:  12 பேர் காயம்

அமெரிக்காவின் ஒக்லஹோமா (Oklahoma) மாகாணத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான விருந்துபசார நிகழ்வில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்மண்ட் (Edmond) காவல் துறையின் ஊடகப் பேச்சாளர் எமிலி வார்டு (Emily Ward) தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அர்காடியா ஏரிக்கு (Arcadia Lake) அருகிலுள்ள ஒரு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. ஒக்லஹோமா நகரத்திலிருந்து சுமார் 21 கி.மீ (13 மைல்) தொலைவில் இந்தச் சம்பவம் […]

இலங்கையில் சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 77 நபர்கள், வணிக வெடிபொருட்களுடன் கூடிய 17 டிங்கிகள் மற்றும் 06 டிராக்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருகோணமலை, கந்தளாய், வாழைச்சேனை, கல்லராவ, கிண்ணியா, துடுவ, காயங்கேணி,போல்ட் பொயின்ட், சாம்பூர், சிலாவத்தை, இறக்கக்கண்டி, முகத்துவாரம், பனிச்சங்கேணி, நந்திக்கடல் […]

899 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

னாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 899 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 928 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது […]

“மக்களின் காணி மக்களுக்கே ” மயிலிட்டி கடற்கரையோர காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்!

“மக்களின் காணி மக்களுக்கே ” என்ற எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையில் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் பெருமளவான காணிகளை விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். தையிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணிகள் மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட வருகின்றோம். குறிப்பாக […]