பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

மத்திய பிலிப்பைன்ஸின் சமர் தீவில் திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 06 அலகுகளாகப் பதிவானதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு சமர் மாகாணத்தில் உள்ள சான் ஜூலியன் நகருக்கு அருகே நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 56 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து கிழக்கு சமர் மாகாண அனர்த்த முகாமைத்துவ […]

ஹோர்முஸ் நீரிணையின் புதிய வரைப்படத்தை வெளியிட்டது ஈரான்

ஹோர்முஸ் நீரிணையில் தனது கடற்படையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் குறிக்கும் புதிய வரைபடத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரைபடத்தில் எல்லைகள், மேற்கில், ஈரானின் கெஷ்ம் தீவின் மேற்கு முனைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல்-குவைன் அமீரகத்திற்கும் இடையிலான ஒரு கோட்டுடன் இப்பகுதி ஆரம்பமாகிறது. அதேபோல், கிழக்கில், ஈரானின் மொபாரக் மலைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா அமீரகத்திற்கும் இடையிலான ஒரு கோட்டில் இப்பகுதி நிறைவடைகிறது. இவ்வாறு […]

“தவெக-வின் வரலாற்றுச் சாதனை!” – குடும்பத்துடன் விசிலூதி வெற்றிக் கொண்டாட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகப்பெரிய முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் இல்லத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் தனது குடும்பத்தினருடன் இணைந்து தவெக-வின் இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்து கொண்டு, தவெக-வின் தேர்தல் சின்னத்தை நினைவுபடுத்தும் […]

காலங்காலமாகத் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்கின்றன – ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன்

காலங்காலமாகத் தொடரும் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், நாளுக்கு நாள் அதன் தீவிரம் அதிகரித்துச் செல்வதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த மே முதலாம் திகதி ‘ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி’ ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பகாலம் முதலே மீனவர்கள் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், மீனவர்களின் பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. மாறாக, அவை பல மடங்கு […]

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு; விஜயின் இடத்தில் நடிகை திரிஷா?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் நேரிடும். இதனால் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கேற்ப தவெக முன்னிலையில் இருக்கும் போது, நடிகை திரிஷாவும் விஜய்யின் வீட்டிற்கு நேரில் வந்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவடை சுமார் 46% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மதியம் […]

ஈரான் – அமெரிக்கப் போர் பரபரப்பு: ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இரண்டு ஏவுகணைகளை ஏவி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றைத் தாக்கியுள்ளதாகத் தெஹ்ரான் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்த விபரங்கள்: ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஜஸ்க் தீவுக்கு (Jask island) அருகே பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் மீது இரண்டு ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் போர்க்கப்பல் பின்வாங்கியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமெரிக்கா அல்லது ஏனைய […]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026: முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் நிலவரம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமைச்சர்கள் 14 பேர் முன்னிலை பெற்றுள்ளனர். 11 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் பெரும்பான்மையானோர் காலை முதலே பின்னடைவை சந்தித்தனர். இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் திமுக அமைச்சர்கள் சிலர் முன்னிலைப் பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை […]

விஜய்யை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர்; இது சாதாரண வெற்றி இல்லை – எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

“ஒரு அப்பாவாக மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதைவிட என்ன வேண்டும்?” என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 105-க்கும் மேற்பட்ட இடங்களை வசப்படுத்தும் வகையில் முன்னிலை வகித்து வருகிறது. இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “ விஜய், தான் முதல்வர் ஆக வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அதற்கான […]

ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

மே தினப் பேரணியின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு ‘ப்ரீ லோயர்ஸ்’ சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு தொடர்பாக, வருங்காலத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதி பாரபட்சமான கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “அநுர குமார திஸாநாயக்க, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் தீர்ப்பு குறித்து வெளியிட்ட கருத்து நாடு முழுவதும் […]