நோர்த் பெட்டில்ஃபோர்ட் கொலைச் சம்பவம்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

நோர்த் பெட்டில்ஃபோர்ட் (North Battleford) பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சஸ்காச்சுவான் (Saskatchewan) ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸாரின் தகவல்படி, 36 வயதுடைய டைசன் மொஸ்கிடோ (Tyson Mosquito) என்பவரது மரணம் தொடர்பாக, 21 வயதுடைய டைசன் கம்மர் (Tyson Cummer) என்பவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 4 மணியளவில், 105 […]

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களுக்கும் விளக்கமறியல்

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 22 தேரர்களையும் நேற்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25-ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புகளை மீளப்பெற அமெரிக்கா முடிவு

ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புகளை மீளப்பெற அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. ஈரான் உடனான போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களால் அமெரிக்கா அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக மெர்ஸ் குறிப்பிட்டதையடுத்து, அவரை ட்ரம்ப் விமர்சித்த மறுநாளே இந்த முடிவு வெளியாகியுள்ளது. குடிவரவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மெர்ஸ் மிக மோசமாகச் செயல்படுகிறார் என ட்ரம்ப் […]

தமிழ் நாடு – புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

தமிழ் நாடு – புதுமடம் கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய பெறுமதி 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது இவ்வாறு பதுக்கி வைக்கப்படடிருந்த பொருட்கள் எஸ்.பி தனிப்பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம் (30.04.2026) மீட்கப்பட்டுள்ளது. பூச்சி மருந்து, ஷாம்பு, காபி தூள், ஃபேஸ் க்ரீம், சோப்பு, உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ருந்தது. குறித்த பொருட்களை மீட்ட எஸ்.பி தனிப்பிரிவு பொலிஸார் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் […]

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தெற்கு மாகாணத்திலும் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் […]

இலங்கைக்கான கனேடிய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களை நாளை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி

கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்ட்டின் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை (04) கூட்டாகச் சந்திக்கவுள்ளனர். கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் கத்ரின் மார்ட்டின் நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார். இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாகக் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் அவர், மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். அதேவேளை […]

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு: லங்கா ஓட்டோ டீசல்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 392.00 ரூபாவாகும். லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 458.00 ரூபாவாகும். லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4: 15.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள […]

சிரியாவின் எண்ணெய் தேவையை ஈடுகட்டும் மொஸ்கோ!

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையிலும், அந்நாடு தனது எரிசக்தித் தேவைகளுக்காக இன்னும் ரஷ்யாவின் எண்ணெயையே பெரிதும் நம்பியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு ரஷ்யா இராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததால் அந்நாட்டு மக்களிடையே மாஸ்கோ மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இருப்பினும், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி குறைவாக உள்ளதால், சிரியா தனது இறக்குமதியில் ரஷ்யாவையே முதன்மைப் […]

இந்திய கடற்றொழிலாளர்களால் பலாலி மீனவர் கைதான விவகாரத்தில் குழப்பநிலை?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட விவகாரம் அண்மையில் பேசு பொருளாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தம்மை திட்டம் இட்டே கடல் கொள்ளையர் என கைது செய்ததாகவும் தாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் எம்மை பற்றி கடல் […]

அரசாங்கம் தொழிற்சங்கப் பிரச்சினைகளை முன்வைப்பவர்களைத் தாக்குகின்றது!

தொழிற்சங்கப் பிரச்சினைகளை முன்வைப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கும் நிலைக்கு அரசாங்கம் மாற்றமடைந்துள்ளது. தொழிற்சங்கங்களின் தோள்மீது ஏறி அதிகாரத்தை கைப்பற்றி தொழிலாளர்களுக்கு அநீதியிழைக்கும் வரலாற்றின் மோசமான அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர் தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைகளை கண்டு கொள்ளாத அரசாக என்பிபி அரசு பதிவாகியுள்ளது. எதிர்க்கட்சியில் […]