‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.‌ இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் திரைப்படத்தில் ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு […]

நடிகர் விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’

யதார்த்த நடிகர்களான விதார்த் – கலையரசன் – சந்தோஷ் பிரதாப் – ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘மூன்றாம் கண்’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக் குழு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது. இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரிகுன், தேஜு அஸ்வினி, அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ்பிரதாப் மற்றும் அஜீஷ் […]

நடிகர் பாரத் நடிக்கும் ‘காவியக் காதல்’ படத்தின் காணொளி வெளியீடு

டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் பாரத் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ‘காவியக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காவியக் காதல்’ திரைப்படத்தில் பாரத், சான்வீ மேக்னா, பால சரவணன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் […]

ராம் சரணின் ‘பெத்தி’ ஜூன் மாதம் வெளியாகிறது!

பான் இந்திய நட்சத்திரமான ராம் சரண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொமன் இரானி, விஜி சந்திரசேகர் , ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர் .ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். […]

மஹிந்தானந்த அறக்கட்டளை வசமிருந்த காணி மற்றும் கட்டிடங்கள் மீண்டும் புகையிரத திணைக்கள வசம்!

சுமார் 20 வருடங்களாக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்று அதனை நடத்திவந்த மஹிந்தானந்த அறக்கட்டளையின் உடமைகள் மீண்டும் புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் இயங்கி வந்த மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை மற்றும் அதனைச் சார்ந்த வளாகத்தை ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் புகையிரத திணைக்களத்திடம் கையகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, புகையிரத திணைக்கள அதிகாரிகளிடம் […]

நீர்த்தேக்கத்தில் குதித்து காணாமல் போனவரின் சடலம் மீட்பு

பொல்பிட்டிய பிராட்லண்ட்ஸ் நீர்த்தேக்க அணைக்கட்டுப் பாலத்தின் மீதிருந்து கெசல்கமு ஓயாவில் குதித்துக் காணாமல் போயிருந்த நபரின் சடலம், பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. பல்லேவத்தை, பொல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என்பதும், அவர் வீட்டிலிருந்து ஓடிவந்து நீர்த்தேக்க அணைக்கட்டிலிருந்து ஆற்றில் குதித்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் […]

ஐந்து பெரும் துயர்நிறைந்த சம்பவங்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது – சஜித் பிரேமதாச

நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் தடையாக இருப்பதாகவும், இதன் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற கலாநிதி சந்திமா விஜய குணவர்தனவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 7 ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் தற்போதுள்ள மத்திய கிழக்கு போர் வரை ஐந்து […]

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் இழப்பு: எப்.பி.ஐ (FBI) உதவியை நாடுகிறது இலங்கை

மின்னஞ்சல் ஊடுருவல் (Email hacking) மூலம் அரசாங்கத் திறைசேரிக்கு ஏற்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு குறித்த விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ள இலங்கை விசாரணையாளர்கள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ (FBI) இன் உதவியை நாடியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், மின்னஞ்சல் ஊடுருவல் மற்றும் ‘பிஷிங்’ (Phishing) தாக்குதல்களைக் கண்டறிந்து தடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையும் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். விசாரணையின் […]

யூத சமூகத்தைச் சேர்ந்த மூவர் மீது போலித் துப்பாக்கியால் தாக்குதல்: ரொறன்ரோ பொலிஸார் விசாரணை

வடக்கு யோர்க் (North York) பகுதியில் யூத சமூகத்தைச் சேர்ந்த மூவர் மீது போலித் துப்பாக்கியால் (Replica firearm) தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை பாத்தர்ஸ்ட் வீதி (Bathurst Street) மற்றும் லோரன்ஸ் அவென்யூ வெஸ்ட் (Lawrence Avenue West) சந்திப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட (Hate-motivated) தாக்குதலாகக் கருதப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் […]

டேட்டிங் ஆப் மூலம் பழகி பாலியல் அத்துமீறல்: விட்பி (Whitby) நபர் மீது குற்றச்சாட்டு

இணையம் வழியாக அறிமுகமான பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விட்பி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோ பொலிஸ் சேவையின் தகவல்படி, குற்றம் சுமத்தப்பட்ட நபர் 29 வயதுடைய பெண் ஒருவரை டேட்டிங் தளம் ஒன்றின் ஊடாக அறிமுகம் செய்துள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி ரொறன்ரோவின் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Lawrence Avenue East) மற்றும் ஹோம்ஸ்டெட் வீதி (Homestead Road) சந்திப்பிற்கு […]