பவானி வீதியை விடுவி; இல்லையேல் நாங்களே அகற்றுவோம்”: தையிட்டி விகாராதிபதிக்கு பிரதேச சபை காலக்கெடு!

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்புக்குள் உள்ளடங்கியுள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை விடுவிக்குமாறு கோரி, விகாராதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மே 11-ஆம் திகதிக்கு முன்னர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதியை விடுவிக்கத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என இந்தக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1987-ஆம் ஆண்டின் 15-ஆம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், சபைக்குச் சொந்தமான […]
பொலிஸ் நிலையத்தில் இருந்த திருட்டுப் பொருட்களை எடுத்த செய்த கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்துத் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைத் திருடனிடமிருந்து பெற்று, அவற்றை மறைத்து வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த குறித்த கான்ஸ்டபிளை, நேற்றுப் புதன்கிழமை (29) மாலை கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்த விபரங்கள்: வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், […]
சென்னை மெட்ரோவில் இனி ‘சிங்கார சென்னை அட்டை’ மட்டுமே: பழைய பயண அட்டைகள் இன்றுடன் அதிரடி நீக்கம்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பழைய பயண அட்டைகள் (Travel Cards) முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டு, ‘சிங்கார சென்னை அட்டை’ (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை – NCMC) முறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒரே அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்கும் வசதியை உறுதி செய்ய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி பழைய பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது என […]
விமான நிலையத்தில் ரஷ்ய மருத்துவரிடம் கைவரிசை : சீன நாட்டவர் கைது

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தினுள், ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை குடியேற்ற மருத்துவரிடம் 31 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9,900 அமெரிக்க டாலர்களை திருடிய சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (30) கொழும்பு, கோட்டையிலுள்ள கேசினோ (சூதாட்ட விடுதி) ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EY-394 என்ற விமானம், வியாழக்கிழமை (30) அதிகாலை அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை […]
“உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் அரசுகளுக்கு எதிராகப் போராடுவோம்” – சீமான் மே தின வாழ்த்து!

சென்னை: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம் என அறைகூவல் விடுத்துள்ளார். பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தத்தின் வரிகளை நினைவுகூர்ந்த அவர், உழைப்பாளர் நாள்தான் கொண்டாடப்படுகிறதே தவிர, இன்னும் உழைக்கும் மக்களை உலகம் கொண்டாடவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துயரம் என்று குறிப்பிட்டுள்ளார். 1886-ல் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலைக்காகப் போராடி உயிர்நீத்த தொழிலாளர்களின் தியாகத்தையும், 1923-ல் இந்தியாவில் […]
கனமழை; நாவலப்பிட்டி நகரை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில், மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாவலப்பிட்டி நகரிலுள்ள கண்டி – கம்பளை வீதி மற்றும் பேருந்து நிலையபகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முறையான வடிகால் அமைப்பு இன்மையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பேருந்து நிலையத்திலுள்ள […]
பேராசான் இயற்கையிடம் கற்க மறுப்பதால் ஏற்படும் விளைவே ஆக்கிரமிப்புப் போர்கள் பசுமை அமைதி விருதுகள் விழாவில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு

இயற்கையே உலகின் தலைசிறந்த பேராசான். பல்லினத்துவமே அது போதிக்கும் மிகப்பெரும் பாடம். இயற்கையின் பல்வகை உயிரினங்களைப் பற்றிப் பாடங்களில் பயிலுகின்ற நாம் அது போதிக்கும் பன்மைத்துவத்தின் எளிய முக்கியத்துவத்தை உள்வாங்குவதில்லை.இதனாலேயே பூமியை எமக்கு ஏற்ற கிரகமாகத் துப்பரவு செய்யும் நோக்கில் ஏனைய உயிரினங்களைக் கொன்றொழித்து வருகின்றோம். இதன் இன்னுமொரு வெளிப்பாடாகவே உலகில் நிலவுகின்ற இனங்களின், மொழிகளின், பண்பாடுகளின், மதங்களின் பன்மைத்துவங்களை அழிக்கும் போக்கும் மேலோங்கி வருகின்றது. பேராசான் இயற்கையிடம் கற்க மறுப்பதன் விளைவே இன்று உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் […]
திறைசேரி நிதி பரிமாற்றம் குறித்த விவாதம் அடுத்த வாரம்; ஒழுக்கத்தைப் பேணுமாறு சபாநாயகர் அழைப்பு

நேர ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல் காரணமாக, பொதுத் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சியினர் கோரிய விவாதத்தை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நடத்த சபை முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். இந்த வாரம் நாடாளுமன்றம் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், மே 8ஆம் திகதி வியட்நாம் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதோடு, பல சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் இலங்கை நாடாளுமன்றம் நிறுவப்பட்ட […]
திறைசேரி விவகாரம் ஒரு இருண்ட திருப்பத்தை எட்டியுள்ளது

திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்கடொலர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று குளியாப்பிட்டியவில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் பிரிவின் உதவிப் பணிப்பாளரான 50 வயதுடைய ரங்க நிஷாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தனது தோட்டத்தில் வைத்து காலில் உள்ள தமனியை (artery) வெட்டி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் […]
தபால் சோதனையிடும் அதிகாரம் பொலிஸாருக்கு மட்டுமே: கனடா மத்திய அரசு விளக்கம்

தபால் சோதனையிடும் அதிகாரத்தை விரிவாக்கும் முன்மொழிவு, பொலிஸாருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தபால் ஊழியர்களுக்கு அல்ல என்றும் கனடா மத்திய அரசு தெரிவித்துள்ளது. வசந்த கால பொருளாதார மேம்பாட்டு அறிக்கையில் (spring economic update) சேர்க்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்ட அமுலாக்கத்துறையினர் தகுந்த பிடியாணை (warrant) மூலம் மட்டுமே தபால்களை சோதனையிடவும் பறிமுதல் செய்யவும் அனுமதிக்கும் என்று கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) உறுதிப்படுத்தினார். தற்போது 500 கிராமுக்கு குறைவான எடையுள்ள பொதிகளை பிரித்துப் பார்க்க முடியாத […]