இரத்னபுரியில் தீ பரவல் ; 90 கடைகள் எரிந்தன!

சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பல கடைகள் தீயினால் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரத்னபுரி மாநகர சபை மற்றும் […]
போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்திடுகையில், […]
அபாயகரமான நெகிழி மணிகள் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில்…

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொங்கனத்த மற்றும் பளுக்காத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதிகளைத் […]
தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு! திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் முதலிடம்!

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய வேளையில் வெயில் அதிகரித்த போதிலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் இன்று பகல் 1 மணி நிலவரப்படி சராசரியாக 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான நிலவரப்படி, திருப்பூரில் அதிகபட்சமாக 62.97 சதவீதமும், நாமக்கல்லில் 62.51 சதவீதமும், ஈரோட்டில் 61.79 […]
லங்கா பிறீமியர் லீக் ஜூலையில் ஆரம்பிக்கிறது

லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் முதன்முறையாக நடைபெறவுள்ளது. இந்த ஆறாவது பருவகாலமானது உண்மையாக கடந்தாண்டு இறுதியில் நடைபெறவிருந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கு தயார்படுத்தலாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை தொடரில் ஆறாவது அணியை இணைப்பது குறித்தும் தகவல்கள் வெளியாகிய நிலையில் எதுவித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் வெளியாகவில்லை.
காவத்தை சம்பவத்துக்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து தரைமட்டமாக்கியுள்ளமைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , “தோட்டங்களில் பாதுகாப்புக் கடமைகளுக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந்தெரியாத நபர்களே, இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் குறித்துக் காவத்தை […]
“வாக்களிப்பது அடிப்படை உரிமை; தடையாக இருக்காதீர்கள்!” – 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் கேட்டு விஜய் அதிரடி கடிதம்!

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் தவித்து வருவது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது: “சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர். தேர்தல் பணிக்காகப் பெருமளவிலான […]
காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குப்பதிவு: வெயிலையும் பொருட்படுத்தாமல் குவியும் வாக்காளர்கள்!

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், ஜனநாயகக் கடமையை ஆற்ற மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் திரண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]
வவுனியாவில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து ஒருவர் பலி

இன்று (23) காலை வவுனியா திருநாவற்குளம் பகுதியில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஊடகவியலாளரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டும், மற்றொருவர் காயமடைந்தும் உள்ள நிலையில், இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் லெபனான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய அமல் கலீல் (Amal Khalil) கொல்லப்பட்டார்; சுயாதீன புகைப்படக் கலைஞர் ஜைனப் ஃபராஜ் (Zeinab Faraj) காயமடைந்தார். தங்களுக்கு முன்னால் சென்ற வாகனம் முதல் வான்வழித் தாக்குதலில் சிக்கி இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஊடகவியலாளர்கள் தஞ்சம் […]