அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை உத்தி ‘மிகப்பெரிய வெற்றி’ அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஈரானுடன் “இறுதி ஒப்பந்தம்” எட்டப்படும் வரை இந்தத் தடைகள் நீக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்நிலையில், பைனான்ஷியல் […]
வட தமிழக தேர்தல் களத்தில் ரொபோக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தி இளம் வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வட தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைய தலைமுறை வாக்காளர்களை வரவேற்கும் வகையில் ரொபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களை ரொபோ உற்சாகமாக வரவேற்றது. அத்துடன் வாக்களித்தவர்களுக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள், விதை பந்துகள் மற்றும் பாராட்டு சான்றிதழும் […]
தீர்க்கப்படக்கூடிய சில சிறிய எல்லைப் பிரச்சினைகளே லெபனானுடன் எங்களுக்கு உள்ளன

அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் இன்று (23) நடைபெறும் சூழலில், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் சார் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். “லெபனானுடன் எங்களுக்கு எந்தவிதமான தீவிர கருத்து வேறுபாடுகளும் இல்லை. தீர்க்கப்படக்கூடிய சில சிறிய எல்லைப் பிரச்சினைகளே உள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் இயல்புநிலைக்கு தடையாக இருப்பது ஹிஸ்புல்லா மட்டுமே” என்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை ஆயுதமற்ற அமைப்பாக […]
பெரும்பத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு: தனி ஒருவளாக வந்து வாக்கு செலுத்திய சீலா!

திருநெல்வேலி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் வேளையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் ஒரு கிராமமே தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி நடந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, 290-வது வாக்குச்சாவடியைச் சேர்ந்த 969 வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் காலை முதல் அந்த வாக்குச்சாவடி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் […]
அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் ; சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்துமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார். அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி ஹயஸ் ரக வாகனத்தை செலுத்தினார் என […]
மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
நுராதபுரம் – அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று (22) மாலை உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும், 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை (23) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக […]
வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்ற தமிழர் விரோத அரசல்ல நாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று புதன்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் […]
13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 077 555 4959 அல்லது 077 555 4979 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர் கடைசியாக நீல நிறத்திலான ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ டி-ஷர்ட் மற்றும் கிரீம் நிறத்திலான அரைக்காற்சட்டை அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாத இறுதியில் இருந்து புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகள்

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அந்தத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், வாகன உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட்டு இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களம் கூறியது. கலாநிதி ஹர்ஷ டி சில்வா (அரசாங்க நிதி பற்றிய குழுத் தலைவர்): “முன்னர் இலக்கத் […]
நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட நிதியை மீளப் பெற முயற்சி

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். அமைச்சின் மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஹெக்கர்கள் மின்னஞ்சல் ஊடாக அமைச்சின் கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய தூதுவர் மற்றும் கடன் வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷன சூரியபெரும மேலும் தெரிவித்தார். […]