திருநெல்வேலி,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் வேளையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் ஒரு கிராமமே தேர்தலைப் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி நடந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, 290-வது வாக்குச்சாவடியைச் சேர்ந்த 969 வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் காலை முதல் அந்த வாக்குச்சாவடி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இருப்பினும், கிராமத்தின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பையும் தாண்டி, ‘சீலா’ என்ற பெண் மட்டும் துணிச்சலாக வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார். நூற்றுக்கணக்கான மக்கள் கோரிக்கைகளுக்காகத் தேர்தலைத் தவிர்த்த நிலையில், தனி ஒரு பெண்ணாக அவர் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தகவல் அறிந்து வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், தற்போது கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Nanguneri #TNElection2026 #ElectionBoycott #TirunelveliNews #VoteForChange #Democracy #SocialJustice #NanguneriConstituency #TamilNaduElection #VotingDay #April23 #PublicProtest #ElectionCommission #BraveWoman #DemocraticRight #TNAssemblyElection #BreakingNews #TamilPolitics #VillageProtest #HumanRights