வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத் தேர்தல்: 2011-ம் ஆண்டு சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்!

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து வாக்களித்ததால், தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குக் கூடுதல் வாக்குப்பதிவு பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போரில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியிருந்தன. இது, கடந்த 2011-ம் ஆண்டு பதிவான 78.12% […]

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா உள்ளிட்ட உலக நாடுகளின் விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. முக்கிய நிறுவனங்களின் நடவடிக்கை: விமான நிறுவனம்எடுக்கப்பட்ட நடவடிக்கைAir Transatமே முதல் அக்டோபர் வரை 1,000 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இது அதன் மொத்த கொள்ளளவில் 6% ஆகும்.WestJetஏப்ரல் முதல் ஜூன் வரை படிப்படியாக 1% முதல் 6% வரை சேவைகளைக் குறைத்துள்ளது. […]

மாலை 5 மணிக்கே சாதனை! தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல் – 82.24% வாக்குப்பதிவு!

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும் தாண்டி மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிப் புதிய வரலாறு படைத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் மொத்த வாக்குகளையே (4.63 கோடி) மிஞ்சியுள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படியே […]

திறைசேரி நிதி மாயம்: மின்னஞ்சல் ஊடாக ஊடுருவிய ஹேக்கர்கள் – நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

திறைசேரியிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதியில், முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்: 1. ஊடுருவல் முறை: குற்றவாளிகள் நிதி அமைச்சின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) நுழைந்தே இந்த மோசடியைச் செய்துள்ளனர். இலங்கை அரசாங்கம் உரிய முறையில் கொடுப்பனவுகளைச் செய்திருந்தாலும், ஹேக்கர்கள் மின்னஞ்சல் தொடர்புகளை இடைமறித்து, அந்தப் பணத்தை உரிய தரப்பிற்குச் செல்லவிடாமல் வேறு […]

யாழில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடாத்திய விசேட சந்திப்பு

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. விசாரணைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகளைத் திறம்படச் செயற்படுத்துவதற்கு, காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் குறித்த ஒரு முழுமையான புரிதல் தேவைப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, OMP யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் ஒரு கலந்தாய்வு நிகழ்வினை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக […]

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலேயே சாட்சியமளிக்க சமூகமளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (2304.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கடந்த 2025 ஜனவரி மாதம் முறையான சோதனைகளின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த […]

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல் 4:00 மணி வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அமுலில் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: குருநாகல் மாவட்டம்: ரிதிகம […]

மொழிகளை பணிகளில் பயன்படுத்துவது குறித்த பின்தொடர் பொறிமுறை

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைப் படித்த ஊழியர்கள் அதனை பணிகளில் பயன்படுத்துவது குறித்து ஒரு பின்தொடர் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரச ஊழியர்களுக்கு அறிவுத்தியுள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (NILET) அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மொழிகளைக் கற்கும் அரச ஊழியர்களின் திறன்கள் தொடர்ந்து பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, […]

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் முன்னாள் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகிய நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவினால் புதிய எரிசக்தித் துறை அமைச்சராக அருண கருணாதிலக […]

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மகரந்தப்பருவம் நீடிப்பு மற்றும் மகரந்தத்தின் வீரியம் அதிகரிப்பு காரணமாக சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும்,உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு சுவாசிக்கும் காற்றையும் “கொடியதாக” மாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு முழுவதும் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், வெப்பநிலை அதிகரிப்பு, ஆண்டின் பெரும்பகுதிக்கு தாவரங்களை மகரந்தத்தை உற்பத்தி செய்யத்தூண்டுகிறது. இதன் காரணமாக, ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் […]