ரஷ்ய யுவதி இலங்கைப் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேகப் புகையிரதத்தில் மோதி 23 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் விபரங்கள்: இடம்: இன்று காலை அகங்கம, கப்பலான (Kabalana) புகையிரதக் கடவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து முறை: உயிரிழந்த பெண் விபத்து நடந்த நேரத்தில் மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சமிஞ்சை விளக்குகள்: விபத்து இடம்பெற்ற போது, புகையிரதக் கடவையின் எச்சரிக்கை சமிஞ்சை விளக்குகள் (Light signals) இயங்கிக் […]

கனடாவில் கனமழை எச்சரிக்கை: ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் பல பகுதிகளில் 10 முதல் 25 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். ஒட்டாவா-கட்டினோ (Ottawa-Gatineau) பிராந்தியத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்க மணல் மூட்டைகளைக் கொண்டு சுவர்களை எழுப்பி வருகின்றனர். இதற்காகப் பல இடங்களில் மணல் மூட்டைகளை நிரப்பும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஹாலிபர்டன் கவுண்டியில் உள்ள மிண்டன் ஹில்ஸ் (Minden Hills) பகுதியில் […]

ஸ்கார்பரோவில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: வீட்டின் முற்பகுதி சேதம்

ஸ்கார்பரோவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முன் கதவுப் பகுதியை இலக்கு வைத்து இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செஸ்டர் லீ புலிவார்ட் (Chester Le Boulevard) மற்றும் மோர்கேம் கேட் (Morecambe Gate) ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிப்பு: துப்பாக்கிச் சூட்டில் அந்த வீட்டின் முற்பக்க கதவுப் பகுதி சேதமடைந்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் […]

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்குச் செல்லும் அமெரிக்கக் குழு

ஈரானுடனான பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவொன்று பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்குப் பயணமாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை மாலை இஸ்லாமாபாத் நகரைச் சென்றடைவார்கள். அங்கு ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் (Negotiations) முன்னெடுக்கப்படவுள்ளன. “நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் அறிவுப்பூர்வமான ஒரு ஒப்பந்தத்தை (Deal) வழங்குகிறோம், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானிலுள்ள ஒவ்வொரு […]

கனடாவில் இலங்கையர் கொலை!

கனடாவின் அஜாக்ஸில்வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட 24 வயது இளைஞரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது டரம் பிராந்திய காவல்துறை செவ்வாய்க்கிழமை அதிகாலை அஜாக்ஸில் உள்ள ஒரு வீட்டிற்குள் காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த இளைஞரின் விபரங்களை வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டவர் 24 வயதான திசல் சஞ்சுலா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 12:40 மணியளவிமற்றும் வெஸ்ட்னி ரோடு (றுநளவநெல சுழயன) சந்திப்பிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் யாரோ அத்துமீறி நுழைந்துள்ளதாக காவல்துறைக்குத் தகவல் […]

இந்தியக் கொடியுடன் பயணித்த கப்பல்கள் மீதே ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, கப்பல்களுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. ஓமானின் வடகிழக்கே இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த இரண்டு கப்பல்களும் பின்வாங்கித் திரும்பியுள்ளன. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதற்கு ஈரான் இன்று […]

ஹெரோயினுடன் பாதாள உலக உறுப்பினர் கைது

அம்பலாங்கொடை, மாதம்பாகம, தேவகொட பகுதியில் உள்ள ‘அல்லிய தேவாலயத்திற்கு’ அருகிலுள்ள வீடு ஒன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர், வெளிநாட்டில் வசிக்கும் ‘சமன்கொல்லா’ என அழைக்கப்படும் இடந்தோட்ட அகம்பொடி சஜித் பிரியந்த எனும் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாதம்பாகம தேவகொட […]

ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி; மன்னாரில் சம்பவம்

மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது மற்றும் 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது. மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து […]

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம்

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் அந்தத் திரைக்குள் மறைந்திருந்து மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தப்பிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (18) எல்லை நிர்ணய மசோதா தோற்கடிக்கப்பட்ட சம்பவத்துடன் எமது நாட்டில் நடைபெறும் சில விடயங்களை ஒப்பிட்டு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்குக் கூறப்படும் […]

இந்தியா கூட்டாட்சிக்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

ந்தியா தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்துஇ தமிழர்களின் தேசம் மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவூர்தி படுவான்கரைக்கு சென்றவுடன்அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர்இ தொடர்ந்து உரையாற்றுகையில் அன்னை பூபதியின் நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்று […]