மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம்

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் அந்தத் திரைக்குள் மறைந்திருந்து மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தப்பிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (18) எல்லை நிர்ணய மசோதா தோற்கடிக்கப்பட்ட சம்பவத்துடன் எமது நாட்டில் நடைபெறும் சில விடயங்களை ஒப்பிட்டு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மாகாணசபைத்தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்று, பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்டத்திருத்தத்தையும் இணைத்து தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான திருத்தத்தை நிறைவேற்றலாம் என்பதாகும்.

மாகாணசபைத்தேர்தல்களைப் பழைய முறையிலேயே நடத்துவது குறித்து கடந்த இரண்டு பாராளுமன்றங்களிலும் நான் தனிநபர் பிரேரணைகளை முன்வைத்தபோது இவ்வாறு தான் கூறப்பட்டது. பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம்.

ஆனால் அந்தத் திரைக்குள் மறைந்திருந்து தேர்தலை நடத்தாமல் தப்பிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை இந்தியாவைப் பொறுத்தமட்டில் சனத்தொகை அதிகரித்தமையினால் மற்றைய மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் கூட்டினால்,சனத்தொகைக் கட்டுப்பாடு என்ற தேசிய கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை குறைவடையும்.

அதேபோன்று எமது நாட்டிலும் தொடர் வன்முறைகளினால் தமிழ்மக்கள் புலம்பெயர்ந்த காரணத்தினால் எமது பிரதிநிதித்துவ எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப் போன்றதாகும். மக்களை அடித்துத் துரத்திவிட்டு,’சனத்தொகை குறைந்துவிட்டது. ஆகையினால் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறையவேண்டும்’ என்று கூறுவது நியாயமற்றதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

d

வவுனியாவிலும் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

April 19, 2026

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (19) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

s

கடற்படையினரால் கணவர் சித்திரவதை: மனைவி உண்ணாவிரதப் போராட்டம்

April 19, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால் மீனவரான தனது கணவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே தாம் மட்டக்களப்பு உதவி

crim

மட்டக்களப்பில் 06 நாட்களில் 4 கொலைகள்

April 19, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக

ca do

கனடா பொருளாதார மந்தநிலையைச் சந்திக்க 30% வாய்ப்பு?

April 19, 2026

உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கனடா பொருளாதார பின்னடைவைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள்

lax

நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படையுங்கள் – லக்ஷ்மன் கிரியெல்ல

April 19, 2026

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக உடனடியாக சட்டமா

har

இந்தியத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

April 19, 2026

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று (19) கொழும்பு அலரி

Geethanath

அகதிகள், மீனவர் பிரச்சினை மற்றும் போக்குவரத்துத் தொடர்பு; இந்தியா-இலங்கை பேச்சு நடத்த வேண்டும் – கீதாநாத் காசிலிங்கம்

April 19, 2026

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் இந்த உயர்மட்ட விஜயமானது வெறும் சம்பிரதாய நிகழ்வாக அமையாமல், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள

ar

ரஷ்ய யுவதி இலங்கைப் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

April 19, 2026

பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேகப் புகையிரதத்தில் மோதி 23 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்

sc

கனடாவில் கனமழை எச்சரிக்கை: ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

April 19, 2026

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் பல பகுதிகளில் 10 முதல் 25 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு

po

ஸ்கார்பரோவில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: வீட்டின் முற்பகுதி சேதம்

April 19, 2026

ஸ்கார்பரோவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முன் கதவுப் பகுதியை இலக்கு வைத்து இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செஸ்டர்

trump

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்குச் செல்லும் அமெரிக்கக் குழு

April 19, 2026

ஈரானுடனான பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவொன்று பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்குப் பயணமாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது

Cana Sri

கனடாவில் இலங்கையர் கொலை!

April 19, 2026

கனடாவின் அஜாக்ஸில்வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட 24 வயது இளைஞரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது டரம் பிராந்திய காவல்துறை செவ்வாய்க்கிழமை