அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி இறைச்சியைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றி அழித்துள்ளனர். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான நேற்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, ஒரு கோழி இறைச்சிக் கடையின் குளிர்சாதனப் பெட்டியில், நீண்ட நேரத்திற்கு முன் இறந்த கோழிகளின் இறைச்சி (அழுகிய நிலையில்) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. களுவாஞ்சிகுடி பிரிவுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் […]
அமெரிக்காவுடன் தொடர்ந்து செய்திகளைப் பரிமாறி வருகிறோம் – ஈரான் வெளியுறவு அமைச்சகம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்ந்து தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகேய் தெரிவித்துள்ளார். ஈரானின் நிலைப்பாடு “தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அதைத் தொடர்ந்து வரும் தொடர்புகளிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று பகேய் கூறினார். முன்னதாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு தூதுக்குழுவை ஈரான் இன்று வரவேற்க “அதிக வாய்ப்பு” உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஈரான் […]
கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் முதியவரின் சடலம்

கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்கானப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) ஆடு மேய்க்க சென்ற ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற காணியொன்றுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த நிலையில் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப் பட்டதையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு சடலமாக கானப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியை சேர்ந்த இளையவன் நல்லதம்பி […]
பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை – மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்த நெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தெரியவருகையில் இன்று (15) 3.00 மணிக்கு நெடுந்தாரகை படகு நெடுந்தீவின் மாவிலித் துறைமுகத்தில் இருந்து சேவையை முன்னெடுத்திருந்தது. இன்றைய நாளின் இறுதிச் சேவையாக இச்சேவை இருந்ததால் மக்கள் யாழ் நோக்கிச் செல்ல அதிகளவில் கூடி நின்றனர். குறிப்பாக புதுவருட தினத்தை முன்னெட்டு நெடுந்தீவு […]
எரிபொருள் வரி தற்காலிகமாக நீக்கப்படுவது விமானக் கட்டணங்களைக் குறைக்குமா?

மத்திய அரசின் எரிபொருள் மீதான கலால் வரி (Excise tax) தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதை கனடாவின் பல விமான நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இருப்பினும், இதனால் டிக்கெட் விலைகள் குறையக்கூடும் என்று ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சூசகமாகத் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று, புதிய பெரும்பான்மை அரசாங்கத்தின் பிரதமராக தனது முதல் நடவடிக்கையாக, மார்க் கார்னி (Mark Carney) ஏப்ரல் 20 முதல் ‘லேபர் டே’ (Labour Day) வரை மத்திய கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்தார். தற்போது, விமான […]
வைத்தியருக்கு பாலியல் தொல்லை: நோயாளி கைது
பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏதோவொரு நோய் காரணமாக முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் (Blood Pressure) பரிசோதிக்கச் சென்றுள்ளார். இதன்போது, சந்தேக நபர் திடீரென வைத்தியரின் மார்புப் […]
ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026: விண்ணப்பங்கள் கோரல்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள தரப்பினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது. இம்முறை விருதுகள் மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன: 1. கைத்தொழில் துறை (Industry Sector) இது பாரிய அளவிலான கைத்தொழில்கள் மற்றும் சிறு/நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் என இரண்டு உப […]
பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக தலதா மாளிகையில் அரச எண்ணெய் தேய்க்கும் விழா

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டுக்கான அரச எண்ணெய் தேய்க்கும் விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (15) காலை கண்டியில் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மகா விகாரவங்சிக சியாமோபாலி மகா பீடத்தின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக […]
கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருள் விவகாரம்: ’தோடம்பழம்’ உறுப்பினருக்கு விளக்கமறியல்

கொரியர் (Courier) சேவை ஊடாக கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) மாலை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட ஊழல் […]
விஜய்யின் ’ஜனநாயகன்’ கசிந்ததற்கு நடிகர் சங்கம் கண்டனம்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரையரங்கின் இருள் அகன்று திரை திறக்காத முன்பே, ‘ஜனநாயகன்’ என்ற படைப்பின் உயிரைப் பறித்து, அதைக் கள்ளத்தனமாக சமூக வலைத்தளங்களில் அறுத்தெறிந்து, அதன் வருங்காலத்தைக் காரிருளில் மூழ்கடித்த இந்த ஈனச் செயல், சாதாரண சட்ட விதி மீறல் அல்ல, காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிரான திட்டமிட்ட ஒரு வன்முறை. அந்த வன்முறை தான் […]