வட மாகாண அபிவிருத்திகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

தற்போதைய நிலைமைகளில் வடக்குமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.04.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]
தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசமைப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – தவெக தலைவர் விஜய்

“தொகுதி மறுவரையறை ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை. எனவே, தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம், […]
கருப்புக் கொடிப் போராட்டத்தை அறிவித்தார் ஸ்டாலின்

“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்.16) நடக்கும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பாஜக அரசு நாளை […]
தென்னிந்தியாவின் பலம் மிக மிக குறையும் வாய்ப்புள்ளது – ப.சிதம்பரம்

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சு.முத்துசாமியை ஆதரித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச் சருமான ப.சிதம்பரம் சூரம்பட்டி யில் பிரச்சாரம் மேற்கொண்டார். வட இந்தியாவில் பாஜக செல்வாக்கு மிகுந்த கட்சி. நான் மறுக்கவில்லை. ஆனால், அரசியல் சாசனத்தை திருத்தக்கூடாது என்பதற்காக தான் பாஜகவுக்கு வடமாநிலத்தினர் வாக்களித்தனர். எனினும், மூன்றில் இரு பங்கு தரவில்லை. அதனால் அரசியல் சாசனம் பிழைத்தது என நினைத்தோம். ஆனால் அரசியல் சாசனத்தை சீரழிக்க விரும்புகிறவர்கள் என்பதை நிருபிக்க […]
மீன்பிடிப் படகுகள் மோதி விபத்து: மன்னார் மீனவர் ஒருவர் பலி
மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை (15) அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து: வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும், காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. பாதிப்பு: மோதிய வேகத்தில் இரண்டு படகுகளும் பலத்த சேதமடைந்தன. படகிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். உயிரிழப்பு […]
3 தசாப்தங்களின் பின் லெபனானும் இஸ்ரேலும் பேச்சு

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனானும், இஸ்ரேலும் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றுள்ளன.
விமானத்தில் ரகளை: வான்கூவரில் 10 பயணிகள் மீது குற்றவியல் நடவடிக்கை

ன்கூவர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெக்ஸிகோவிற்குச் செல்லவிருந்த வெஸ்ட்ஜெட் (WestJet) விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட 10 பயணிகளுக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் காவல்துறை பரிந்துரைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 7:30 மணியளவில், வான்கூவரில் இருந்து காபோ சான் லூகாஸ் (Cabo San Lucas) செல்லவிருந்த WS2662 விமானத்தில் “கட்டுக்கடங்காத பயணிகள்” (Unruly passengers) இருப்பதாக ரிச்மண்ட் காவல்துறைக்கு (RCMP) தகவல் கிடைத்தது. அந்த 10 பயணிகளும் விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவில்லை என்றும், இது […]
“வெறுப்புப் பேச்சைத் தூண்டிய” குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஏற்கனவே காவல்துறை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற ட்ராவிஸ் பேட்ரன் (35), தற்போது மீண்டும் “வெறுப்புப் பேச்சைத் தூண்டிய” குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சஸ்காட்சுவான் மாகாணம் ரெட்வர்ஸ் (Redvers) பகுதியைச் சேர்ந்த பேட்ரன் மீது, ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு எதிராகத் திட்டமிட்டு வெறுப்பைப் பரப்பியதாக (Willful promotion of hatred) ஏப்ரல் 10-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணையதளத்தில் […]
கடந்த நான்கு நாட்களில் பல கோடி ரூபா வருமானம்

கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் […]
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் சந்திப்பு?

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் இந்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இதற்காக இரண்டு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் யுரேனியம் செறிவூட்டலை 20 வருடங்களுக்கு நிறுத்த வேண்டும் என அமெரிக்கா ஈரானிடம் கோரிக்கை விடுத்தது. எனினும் 5 வருடங்களுக்கு மாத்திரமே யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி […]