கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்கானப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) ஆடு மேய்க்க சென்ற ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற காணியொன்றுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த நிலையில் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப் பட்டதையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு சடலமாக கானப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியை சேர்ந்த இளையவன் நல்லதம்பி (வயது -71) என அடையாளம் காணப்பட்டுள்ளது.