வீட்டு வாடகை முரண்பாடு; வவுனியாவில் முதியவர் படுகொலை
வவுனியாவில் வீட்டு வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர். குறித்த முதியவர் தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சடலத்தை மீட்ட பொலிஸார், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, முதியவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே வீட்டு […]
10 வயதுச் சிறுமி விபத்தில் உயிரிழப்பு
மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி […]
கடத்தப்பட்ட உலர் மஞ்சள் மீட்பு

கற்பிட்டியின் பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இந்த மாதம் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், […]
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 10 மணியளவில் ஏறாவூர் முதலாம் பிரிவு நூலக வீதியிலுள்ள […]
ரூ.10 மில்லியன் பெறுமதியான அழகு சாதனப் பொருட்கள் மீட்பு

கொழும்பு- புறக்கோட்டை பகுதியில் எவ்வித அடையாளக் குறிகளுமற்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான அழகு சாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் நேற்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனை நடவடிக்கையின் போது கட்டாயமாக இருக்க வேண்டிய லேபிள்கள் அல்லது அடையாளக் குறிகள் எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த உடல் பூச்சு கிறீம்கள் (Body Creams) மற்றும் லோஷன்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் […]
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞனின் வழக்குடன் தொடர்புடையவருக்கு பதவி உயர்வு – சுகாஷ் கண்டனம்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் வழக்குடன் தொடர்புடைய பொலிஸாருக்கு மீள் பணி நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளமைக்கு சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்(10.04.2026) அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற இளைஞன் சில வருடங்களுக்கு முன்பு பொலிஸ் காவலில் வைத்து சித்திரவதைக்கு […]
புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று (10.04.2026) அதிகாலை சிக்கியுள்ளனர். வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரே விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் […]
ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஐரோப்பிய விமான சேவைகள் பாதிக்கும்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்படாவிட்டால், மூன்று வாரங்களுக்குள் ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய விமான சேவை பேரவை எச்சரித்துள்ளது. பெர்சிய வளைகுடா பகுதி, ஐரோப்பாவின் விமான எரிபொருள் இறக்குமதியில் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்படும் இடையூறுகள் நேரடியாக ஐரோப்பாவின் விமான சேவைகளை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. கோடை சுற்றுலா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் உறுப்பினர்களிடையே எரிபொருள் கிடைப்பது குறித்து அதிகரிக்கும் […]
பௌதீக விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி கனிவிழி!

2026 ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பௌதீக விஞ்ஞான பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் விசுவமடு மகாவித்தியாலய மாணவி யோ. கனிவிழி இரண்டாம் நிலை பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து மாணவி மேலும் தெரிவிக்கையில், “எல்லோராலும் முயற்சி செய்தால் முதலிடம் கூட வர முடியும்”பௌதீக விஞ்ஞான பிரிவில் நான் 2 ஏ, பி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை பெற்றுள்ளேன். நான் இந்த நிலையை அடைவதற்கு உதவிய குடும்பத்தினருக்கும், நான் இந்த […]
அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தமைக்கான காரணம் ஊழலை ஒழிப்பதற்கே
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தமைக்கான பிரதான காரணம் ஊழலை ஒழிப்பதற்காகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று(10.4.2026) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ள அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மணலின் விலையும் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. எனவே, மணல் விநியோகச் சங்கிலியை […]