ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இருவரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 10 மணியளவில் ஏறாவூர் முதலாம் பிரிவு நூலக வீதியிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியிடம் இருந்து 5840 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றிய நிலையில் வீட்டை சோதனையிட்ட போது மேலும் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அத்துடன் அங்கு போதை வியாபாரியுடன் இருந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு கொஸ்தாப்பர் உட்பட இருவரையும் கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு போர்கள் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உர உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.

இலங்கை எப்போதெல்லாம் இன்னல்களைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் சீனா எப்போதும் முதன்முதலாக உதவிக்கரம் நீட்டி வருவதாகத் தூதுவர் வலியுறுத்தினார். தற்போதைய சர்வதேச நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விவசாயத் துறை சார்ந்த சவால்களை முறியடிக்க சீனா இலங்கைக்குத் துணையாக இருப்பதாக அவர் கூறினார்.

எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை எரிபொருள் உதவியை வழங்கிய ஒரே நாடு சீனா மட்டுமே என்று தூதுவர் சி குறிப்பிட்டார். “சீனா மட்டுமே, சீனா மட்டுமே இதுவரை எரிபொருள் உதவியை வழங்கியுள்ளது,” என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.

சீனா தனது எண்ணெய்த் தேவையில் 76 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்வதன் மூலம் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட போதிலும், இலங்கையின் சுமையைப் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார். தனது சொந்தத் தேவைகளுக்காக இறக்குமதியைச் சார்ந்திருந்தாலும், இலங்கையின் சிரமங்களைப் போக்க சீனா தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றார்.

சினோபெக் (Sinopec) நிறுவனம் மூலமான எரிபொருள் விநியோகம் குறித்து விளக்கிய அவர், கடந்த மாதம் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைந்ததாகவும், போக்குவரத்துச் சவால்களை முறியடித்து இந்த மாதமும் மற்றுமொரு விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவை தவிர, சீன அரசாங்கம் நேரடியாகவும் இலங்கைக்கான எரிபொருள் உதவியைத் தொடரும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

எரிபொருள் மட்டுமன்றி, இலங்கையின் விவசாயத் துறைக்கும், குறிப்பாக சிறுபோக (Yala season) நெல் உற்பத்திக்கு அவசியமான உர விநியோகத்திற்கும் சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

யூரியா உரத்தைத் தயாரிக்கத் தேவையான இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உலகளவில் உரத் தட்டுப்பாடு நிலவுவதைச் சுட்டிக்காட்டிய தூதுவர், “திரவ இயற்கை எரிவாயு (LNG) இல்லாமல் யூரியாவைத் தயாரிக்க முடியாது,” என்றார். இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், சிறுபோகத்தில் விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கையைத் தடையின்றி மேற்கொள்ளத் தேவையான உரத்தை சீனா இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்