வவுனியாவில் வீட்டு வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர். குறித்த முதியவர் தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலத்தை மீட்ட பொலிஸார், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, முதியவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே வீட்டு வாடகை பணம் தொடர்பாக நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முரண்பாடு காரணமாகவே முதியவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.