யாழ். நக­ரில் கள­வா­டப்­பட்ட நகை­கள் மீட்பு!

யாழ். நக­ரில் உள்ள வீடொன்­றில் இருந்து கள­வா­டப்­பட்ட எட்டரை பவுண் தங்க நகைகள் யாழ். குற்­றத் ­த­டுப்புப் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்றையதினம் மீட்கப்பட்டன. யாழ்ப்­பா­ணம் நக­ர் ­ப­கு­தி­யில் உள்ள குறித்த வீட்­டில் வசிக்­கும் கண­வ­னும் மனை­வி­யும் பணி நிமித்­தம் பக­லில் வீட்­டில் இருப்பதில்லை. அத­னால் வீட்­டைப் பரா­ம­ரிப்­ப­தற்­கென பணிப்­பெண் ஒரு­வரை வேத­னத்­துக்கு அமர்த்தினர். இந்­த­நி­லை­யில், அவர்­கள் வீட்­டில் இருந்த 14 பவுண் நகை­க­ளைக் காணாமல் போனது. இத­னால் அந்த நகை­கள் கள­வா­டப்­பட்­டி­ருக்­க­லாம் என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் […]

கெர்மன்ஷா மாகாண தாக்குதலில் 13 பேர் பலி

ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில், குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் மெஹர் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் இதைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொடர் தாக்குதல்கள், இராணுவ இலக்குகளிலிருந்து விலகி, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்துள்ளன. உயிரிழந்த 13 பேரில், ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட இரண்டு சிறு குழந்தைகளும் நான்கு பெண்களும் அடங்குவதாக மெஹர் செய்தி […]

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அந்தத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் தற்போது 76.47 சதவீத நீர் இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்கள் 61.84 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 92.01 சதவிகிதமாகும். பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 94.93 சதவிகிதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 […]

ஊழியர் சேமலாப நிதிய கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது!

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ‘வெரிட்டே ரிசர்ச்’ (Verité Research) நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரச பிணையங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்த தகவல்களை […]

5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

சப்புகஸ்கந்தைப் பகுதியில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின், ஐஸ், கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக களனி பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின், 515 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 565 கிராம் கொக்கைன் ஆகியன அடங்குவதாக பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். துபாயில் உள்ள இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த […]

இன்று இரவு 8.30 – 9.30 வரை ‘புவி மணித்தியாலம்’

இவ்வாண்டின் ‘ புவி மணித்தியாலம்’ நாளை 28ம் திகதி இரவு 8.30 முதல் 9.30 வரை கொண்டாடப்படவுள்ளது. நாங்கள் வாழும் எங்கள் பூமியைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இந்த புவி மணித்தியாலம் கொண்டாடப்படுகின்றது. இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றார். இவ்வாண்டு புவி மணித்தியாலம் சக்தி நுகர்வைக் குறைத்தல், காலநிலை அவசரநிலையை முன்னிலைப்படுத்துதல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றிற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் […]

வாகனங்களைச் செலுத்தும் போது வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

வாகனங்களைச் செலுத்தும் போது சில சாரதிகளினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வாகனங்களைச் செலுத்துதல், பிரதான வீதிகளில் போட்டிப் பந்தயங்களில் ஈடுபடுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக வீதி விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். […]

ஆணையாளர் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி; பருத்தித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோப்பாய், கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 10.00 மணியளவில், குறித்த நபர் அதிக மதுபோதையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் உறங்கியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே […]