மட்டக்களப்பு நகர் பகுதியில் மயக்க மருந்துகளுடன் ஓட்டோ ஓட்டுநர் கைது!
மட்டக்களப்பு நகர் பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் மயக்க மருந்துகளுடன் ஓட்டோ ஓட்டுநர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மயக்க மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி மூலம் ஏற்றப்படும் திரவ மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஓட்டோ ஓட்டுநர் நீண்டகாலமாக இளைஞர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாறான போதை மாத்திரைகளை விநியோகித்து […]
யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்தில் தீ

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற இ.போ.ச. பேருந்தொன்று நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா தாண்டிக்குளத்துக்கு அண்மித்ததாக பேருந்து சென்று கொண்டிருந்த போதே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
2026ஆம் ஆண்டு பரீட்சைகள்; ஒத்தி வைப்பது தொடர்பில் குழப்பம்?
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாமாண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து பரீட்சைகள் திணைக்களம் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளர். இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படலாம் என்ற கருத்து மாணவர்களிடையே நிலவுகின்றது. ஆனால் பரீட்சைகள் திணைக்களம் அதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. […]
நாட்டின் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுகளைத் தொடர்ந்து அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் போக்குவரத்துக் கட்டணங்களை 25% அதிகரிக்க வேண்டும் என லங்கா பெட்ரோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்றுமுன்தினம்(25.03.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய இணைச் செயலர் சாந்த சில்வா, சங்கம் தனது கோரிக்கை குறித்து அரசாங்கத்திற்கு முறைப்படி அறிவித்துள்ளதாகவும், இதற்கு சாதகமாக பதிலளிக்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் […]
கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதி உயிரிழப்பு
கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் தகவல் படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், 44 வயதான பெண் ஒருவரும் ஆவர். அவர்கள் பயணம் செய்த கெப் வாகனத்தில் மொத்தம் 13 பேர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி உள்ளிட்ட ஏழு பேரும் மஹியங்கனை […]
மக்களை இழிவுபடுத்தும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புபேச்சுக்களை பேசுவதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தக்கோரி வவுனியா, பிரமனாலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது பிரமனாலங்களம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களினால் பிரமனாலங்குளம் சந்தியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது வெறுப்பு பேச்சுகளை உடனடியாக நிறுத்துங்கள், ஒழுக்க விதிகளை உருவாக்குங்கள், அரசியல் நாகரீகத்தை பேணவும் போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோசடி குற்றப் பத்திரம் கையளிக்கப்படவிருப்பது தெரிந்தும் ஊழல் அமைச்சரை பாதுகாக்கிறது அரசாங்கம்

மோசடி குற்றப் பத்திரம் கையளிக்கப்படவிருப்பது தெரிந்தும் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் இந்த மோசடியின் பங்கு அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அத்துடன் வலசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சரவை பாதுகாக்க வாக்களிக்கும் அனைவரும் ஊழல் மோசடிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களாகும். அவர்களை நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் குறைந்த நிலக்கரி மோசடி […]
ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருக்கிறது – அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர்

ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன், அந்த ஏவுகணை […]
இணையதள மோசடி: தபால் திணைக்களம் எச்சரிக்கை

தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்ற ஒரு போலி இணையதளத்தைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவது குறித்து தகவல் வந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு பார்சலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவித்து, அந்தத் தொகையை ஆன்லைனில் செலுத்துமாறு கோரி மோசடி நடைபெற்று வருவதாக அத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மோசடியான செயல்முறையின் கீழ், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் நுழைவாயில் (Payment Gateway) மூலம் தங்கள் அட்டை விவரங்களை […]
இன்று மழைக்கு வாய்ப்பு!

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]