38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கை வருகிறது

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான முக்கிய தொலைபேசி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வருகிறது. அதில் டீசல் (20,000 மெட்ரிக் தொன்) பெட்ரோல் (18,000 மெட்ரிக் தொன்) அடங்குகின்றது. அந்த சரக்கை தாங்கிய கப்பல் இன்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.
பொத்துவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, பொத்துவிலில் வெள்ளிக்கிழமை (27) பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும், சுயாதீன இளைஞர் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி, பொத்துவில் ஆதார வைத்தியசாலை வரை சென்றது. அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்காகவும், ஏகாதிபத்திய நோக்கத்திற்காகவும் ஈரான் மீது தொடுத்துள்ள இந்தப் […]
எரிபொருள் விலை உயர்வை தடுக்க இந்தியாவில் கலால் வரி குறைப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 10 ரூபாவாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் – ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக […]
நீராவியடி அன்னை சந்திர வீதி புகையிரதக் கடவைப் பாதை மீண்டும் திறக்கப்படும்

யாழ்ப்பாணம் நீராவிஅடி அன்னை சந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவைப் பாதையினை குறித்த அமைச்சருடன் கலந்துரையாடி அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அன்னை சந்திர வீதியில் இருக்கும் புகையிரதக் கடவை மூடப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் சுட்டிக்காட்டப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மருதங்கேணியில் யானைகள் உட்புகுந்தமைதிட்டமிட்ட சதி?

மருதங்கேணிப் பகுதியில் யானைகள் உட்புகுந்தமை திட்டமிட்ட சதியா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மருதங்கேணிப் பகுதியில் யானைகள் என்பது வியப்புக்குரியது. எக்காரணம் கொண்டும் யானைகள் அவ்விடத்திற்கு வருவதற்கு இயலாது. எனவே இது யாருடைய திட்டமிட்ட சதியாக இருக்குமோ என நாம் கருதுகிறோம். எனவே இது தொடர்பில் விரிவான விசாரணை […]
யாழ். போதனா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த சிங்களவரின் இரு சிறுநீரகங்களும் தானம்

ழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த சிங்களவர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவர் மூலம் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. போகஸ்வெள பகுதியைச் சேர்ந்த ஆர். முத்துபண்டா என்பவர் மூளைக்கட்டி காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை மூளைச் சாவடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரது இரு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர். இதற்கமைய, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிறுநீரகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஒருவருக்கு ஒரு […]
கமராவுக்குள் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

சிசிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது. கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர் வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் […]
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால் இலங்கையில் உணவு விலை 15 வீதம் உயரும்!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலக அளவில் உணவுப் பொருள்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்த நீரிணை முடக்கப்பட்டால் இலங்கையில் உணவுப் பொருள்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சிம்பாப்வே 30 வீதம் விலை உயர்வுடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை

தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? இந்த நிலையில் அங்கே பொலிஸ் ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் […]
பிரஜாசக்தி திட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்

பிரஜாசக்தி திட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் வலி வடக்கு, கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரஜாசக்தி திட்டம் தொடர்பான வெளிப்படுத்தலின் போதே இவர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கருத்துரைத்த சிறீதரன், “பிரஜாசக்தி என்பது எம்மால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல. இது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மீறும் வகையில் அமைந்த […]