பிரஜாசக்தி திட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் வலி வடக்கு, கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரஜாசக்தி திட்டம் தொடர்பான வெளிப்படுத்தலின் போதே இவர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதில் கருத்துரைத்த சிறீதரன், “பிரஜாசக்தி என்பது எம்மால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல. இது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மீறும் வகையில் அமைந்த ஒரு திட்டமாகும்” என்று தெரிவித்தார்.